பாடல் #2981
நான் நன்றியோடு துதிப்பேன்
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
நான் நன்றியோடு துதிப்பேன் என் வாழ்நாளெல்லாம் துதிப்பேன் உம் பாதம் பணிந்து துதிப்பேன் உம்மில் மகிழ்ந்து மகிழ்ந்து துதிப்பேன் 1. செய்த நன்மை கோடி அதை சொல்லி முடியாதையா அதை நினைத்து நினைத்து நெஞ்சம் நன்றி சொல்லி மகிழுதையா 2. அதிகாலை தோறும் என்னை அப்பா தட்டி எழுப்பினீரே தினம் புதிய கிருபை தந்து உம்மில் மகிழச் செய்தீரையா 3. தாயின் வயிற்றில் என்னை உருவாக்கும் முன்னே அறிந்தீர் பெயரை சொல்லி அழைத்தீர் உம் பிள்ளையாக மாற்றினீர் 4. புதுப்பாடல் எனக்குக் தந்தீர் உம் நாமம் பாடப் பாட அபிஷேகம் எனக்குத் தந்தீர் சாத்தானை ஜெயித்து வாழ 5. கல்வி மானின் நாவை நீர் எனக்குத் தந்தீரய்யா திக்குவாயை மாற்றி உம்மைத் துதிக்கச் செய்தீரய்யா