பாடல் #2967
நான் என் சொந்தமல்ல
🎙 கிறிஸ்தவ பாடல்
1. நான் என் சொந்தமல்ல! யேசு ரத்தம் சிந்தி மீட்டனர். பாடுப்பட்டு ஜீவன் தந்து என்னை ஆண்டு கொண்டனர். சொந்தமல்ல! யேசுவே! முற்றும் நான் உம் அடிமை! எந்தன் ஜீவன் செல்வம் யாவும் நித்தம் உமக்குடைமை. 2. நான் என் சொந்தமல்ல! என்னை க்றிஸ்துவின் ஆதீனமாய் ஒப்புவித்து அவர்க்கென்று ஜீவிப்பேன் ஆனந்தமாய். சொந்தமல்ல! யேசுவே! முற்றும் நான் உம் அடிமை! எந்தன் ஜீவன் செல்வம் யாவும் நித்தம் உமக்குடைமை. 3. நான் என் சொந்தமல்ல! ஜீவன் சுகம் காலம் படைப்பேன். எஜமானின் சித்தமாக உபயோகம் செய்வேன் நான். சொந்தமல்ல! யேசுவே! முற்றும் நான் உம் அடிமை! எந்தன் ஜீவன் செல்வம் யாவும் நித்தம் உமக்குடைமை. 4. நான் என் சொந்தமல்ல! என்னை ஏற்றுக்கொண்டு ரட்சித்தார். பின்பு மோட்சானந்தம் தந்து ஊழிகாலம் வாழ்விப்பார். சொந்தமல்ல! யேசுவே! முற்றும் நான் உம் அடிமை! எந்தன் ஜீவன் செல்வம் யாவும் நித்தம் உமக்குடைமை.