பாடல் #29363
நிறைவேற்றியருளும் தேவா
🔤 Niraivaerriyarulum Thaevaa
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிறைவேற்றியருளும் தேவா உம் வாக்குத்தத்தங்களை வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற வல்ல வாக்கு மாறாத எங்கள் தேவனே வாக்குத்தத்தங்களை நிறைவேறச் செய்யும் வல்லமையின் தேவனே - எங்கள் ஆம் என்றும் ஆமென் என்றும் உமக்குள் இருக்கிறதான உறுதியும் உண்மையுமான உம் வாக்குத்தத்தங்களை - தேவா முன்மாரியும் பின்மாரியுமான பரிசுத்த ஆவியின் மழையதனை மின்னல் இடி முழக்கத்துடனே முழுதுமாய்ப் பெய்தருள்வீர் - தேவா கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று யோவேலினால் உறுதியாய் உரைத்தீரே - தேவா உங்கள் குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் உரைப்பர் என்றும் தரிசனங்கள் சொப்பனங்களையும் காண்பர் என்றும் உரைத்தீர் தேவா என்னுடைய ஊழியக்காரர் ஊழியக்காரிகள் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று உரைத்தீர் உறுதியாய் - தேவா உயர வானத்திலும் தாழ பூமியிலும் அற்புத அடையாளங்களையும் பெரிய அதிசய செயல்களையும் செய்வேன் என்றீரே - தேவா ஆதி சபையில் ஆத்துமாக்கள் திரள் திரளாய் இரட்சிக்கப்பட்டு ஆவியின் அபிஷேகம் பெற்றது போல் அதிகமாய்க் கிரியை செய்வீர் - மிக ஆத்மீக மழையா பரிசுத்த ஆவியின் மழையால் தாகம் தீர்க்கப்படும் தேவ அன்பினால் நிறைக்கப்பட தேவரீர் கிருபை செய்வீர் - எம் குருடன் பார்க்கவும் ஊமையன் பேசவும் செவிடர் கேட்கவும் கிரியை செய்வீர் சப்பாணிகள் குதித்து நடக்கவும் சர்வாங்க சுகமளிப்பீர் - தேவா மரித்தோர் உயிர்த் தெழுந்திடவும் குஷ்டரோகம் குணமாகிடவும் பாவ ரோகக் கேடுகள் நீங்கி பரிசுத்தமடைந்திடவும் - யாவரும் அகிலமெங்கும் ஆத்துமாக்கள் அலை அலையாய் திரண்டிடும் அன்பரின் ராஜ்யத்திற்குள்ளாகி அன்பரின் மகிழ்ந்திடுவோம் - என்றும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Niraivaerriyarulum Thaevaa Um Vaakkutthatthanggalai Vaakkutthatthanggalai Niraivaertra Valla Vaakku Maaraadha Enggal Devanae Vaakkutthatthanggalai Niraivaerach Seyyum Vallamaiyin Devanae - Enggal Aam Enrum Aamen Enrum Umakkul Irukkirathaana Uruthiyum Unmaiyumaana Um Vaakkutthatthanggalai - Thaevaa Munmaariyum Pinmaariyumaana Parisuttha Aaviyin Mazhaiyathanai Minnal Iti Muzhakkatthudanae Muzhuthumaayp Peytharulveer - Thaevaa Kataisi Naatkalil Maamsamaana Yaavar Maelum En Aaviyai Oorruvaen Enru Yovaelinaal Uruthiyaay Uraittheerae - Thaevaa Unggal Kumaararum Kumaaratthigalum Theerkkatharisanam Uraippar Enrum Tharisananggal Soppananggalaiyum Kaanpar Enrum Uraittheer Thaevaa Ennutaiya Oozhiyakkaarar Oozhiyakkaarigal Maelum En Aaviyai Oorruvaen Enru Uraittheer Uruthiyaay - Thaevaa Uyara Vaanatthilum Thaazha Poomiyilum Arpudha Ataiyaalanggalaiyum Periya Athisaya Seyalkalaiyum Seyvaen Enreerae - Thaevaa Aathi Sapaiyil Aatthumaakkal Thiral Thiralaay Iratsikkappattu Aaviyin Apishaegam Pertrathu Pol Athigamaayk Kiriyai Seyveer - Miga Aathmeega Mazhaiyaa Parisuttha Aaviyin Mazhaiyaal Thaagam Theerkkappatum Thaeva Anpinaal Niraikkappata Thaevareer Kirupai Seyveer - Em Kurudan Paarkkavum Oomaiyan Paesavum Sevidar Kaetkavum Kiriyai Seyveer Sappaanigal Kuthitthu Natakkavum Sarvaangga Sugamalippeer - Thaevaa Maritthor Uyirth Thezhunthidavum Kushtarogam Kunamaakidavum Paava Rogak Kaetugal Neengki Parisutthamatainthidavum - Yaavarum Akilamengkum Aatthumaakkal Alai Alaiyaay Thirantitum Anbarin Raajyatthirkullaaki Anbarin Makizhnthituvom - Enrum