பாடல் #2935
நல்வழி மெய்
🔤 Nalvazhi Mey
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்வழி, மெய், ஜீவன் எனும் நாம தேயனே, - உனை நம்பினேன், ஏழைக்கிரங்கி ஆள், என் நாயனே. செல்வழி விலகு தீயர் ஜீவனில் சேர - நர ஜென்மமாம் மரித்துயிர்த்தாரே, வினைதீர; திருமறை வேதா, அருள் நிறை போதா, கருணை மெய்த் தாதா, உரிமையுள்ளெம் யேசுநாதா! - நல் 1.சத்தியத்தையே போதிக்கும் சத்தியம் நீயே; - அந்த சத்தியத்தில் நான் நடக்கச் சக்தி ஈவாயே; சுத்தமறையாம் சுவிசே ஷத்தை ஈந்தாயே; - அதின் சுத்தாங்க மெய்ம்மை உணர்த்து வித்தருள்வாயே; தொழுதகம் நேர்ந்தேன், அழுதகம் ஓர்ந்தேன், எளியனுள் சோர்ந்தேன், முழுதுமே சார்ந்தேன் உனதடி; - நல் 2.செத்த பிரேதம்போல் செயல் அற்றவன் நானே, - நல்ல ஜீவனைக் கொடுக்கும் நித்ய ஜீவன் நீ தானே; முத்தி நெறி காட்டும் மார்க்கம், சுத்த நல் தேனே, - அதின் மூலம் நான் உயிர்க்க உனதாவி ஈ, கோனே; முடவியல் மாற, நடையது தேற, அடமது பாற, திடமனதாய்க கரையேற. - நல்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nalvazhi, Mey, Jeevan Enum Naama Thaeyanae, - Unai Nampinaen, Aezhaikkirangki Aal, En Naayanae. Selvazhi Vilaku Theeyar Jeevanil Saera - Nara Jenmamaam Maritthuyirtthaarae, Vinaitheera; Thirumarai Vaethaa, Arul Nirai Pothaa, Karunai Meyth Thaathaa, Urimaiyullem Yaesunaathaa! - Nal 1.satthiyatthaiyae Pothikkum Satthiyam Neeyae; - Andha Satthiyatthil Naan Natakkach Sakthi Eevaayae; Sutthamaraiyaam Suvisae Shatthai Eenthaayae; - Athin Sutthaangga Meymmai Unartthu Vittharulvaayae; Thozhudhakam Naernthaen, Azhudhakam Ornthaen, Eliyanul Sornthaen, Muzhuthumae Saarnthaen Unathati; - Nal 2.settha Piraedhampol Seyal Artravan Naanae, - Nalla Jeevanaik Kotukkum Nithya Jeevan Nee Thaanae; Mutthi Neri Kaattum Maarkkam, Suttha Nal Thaenae, - Athin Moolam Naan Uyirkka Unathaavi Ee, Konae; Mudaviyal Maara, Nataiyathu Thaera, Adamathu Paara, Thidamanathaayka Karaiyaera. - Nal