பாடல் #2927
ஜெபமேகம் எழும்பனும் எழுப்புதல்
🔤 Jebamaegam Ezhumbanum Ezhuppudhal
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபமேகம் எழும்பனும் எழுப்புதல் மழை இறங்கனும் என் தேச எல்லையெங்கும் மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று 1.இறுதி நாளில் மாம்சமான யாவர்மேலும் எழுப்புதல் பெருமழையாய் இறங்கவேண்டும் உன்னதரின் வல்லமை உயிர்ப்பிக்கும் வல்லமை ஊற்ற வேண்டும் உலகமெங்கிலும் பொழிந்தருளும் பூமியெங்கும் அபிஷேகம் பெருமழையாய்- 2 மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று 2.புதல்வர்கள் புதல்வியர் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் அனுதினமும் ஆவியில் நிறைந்து வாலிபர்கள் தரிசனங்கள் முதியோர்கள் கனவுகள் காண வேண்டும் அதிகமதிகமாய் 3.அயல்மொழிகள் பேச வேண்டும் ஆவியில் நிறைந்து அதன் அர்த்தம் சொல்ல வேண்டும் பரிசுத்தவான்கள் பேதுருக்கள் பவுல்கள் ஸ்தேவான்கள் பிலிப்புக்கள் தேசமெங்கும் எழும்ப வேண்டும் 4.ஆதிசபை அற்புதங்கள் அடையாளங்கள் அன்றாடம் நடக்க வேண்டும் இயேசு நாமத்தில் குருடர்கள் பார்க்கனும் செவிடர்கள் கேட்கனும் முடவர்கள் நடக்கனுமே 5.வறுமையே இல்லாத தமிழ்நாடு வன்முறையே இல்லாத தமிழ்நாடு நீதியும் நேர்மையும் தூய்மையும் அன்பும் நிறைந்த தமிழ்நாடு பொழிந்தருளும் தமிழ்நாடு எங்கும் அபிஷேகம் பெருமழையாய்-2 மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று 6.பஞ்சமே இல்லாத பாரத தேசம் பாவமே இல்லாத பாரத தேசம் ஊழல்கள் குற்றங்கள் சாபங்கள் நோய்கள் இல்லாத பாரத தேசம் பொழிந்தருளும் தேசமெங்கும் அபிஷேகம் பெருமழையாய்-2 மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebamaegam Ezhumbanum Ezhuppudhal Mazhai Irangganum En Thaesa Ellaiyengkum Manraati Jepikkiraen Thirappin Vaasalil Ninru 1.iruthi Naalil Maamsamaana Yaavarmaelum Ezhuppudhal Perumazhaiyaay Iranggavaentum Unnatharin Vallamai Uyirppikkum Vallamai Oortra Vaentum Ulakamengkilum Pozhindharulum Poomiyengkum Apishaegam Perumazhaiyaay- 2 Manraati Jepikkiraen Thirappin Vaasalil Ninru 2.pudhalvarkal Pudhalviyar Theerkkatharisanam Sollavaentum Anuthinamum Aaviyil Nirainthu Vaalibarkal Tharisananggal Muthiyorkal Kanavugal Kaana Vaentum Athigamathigamaay 3.ayalmozhigal Paesa Vaentum Aaviyil Nirainthu Adhan Arttham Solla Vaentum Parisutthavaankal Paethurukkal Pavulkal Sthaevaankal Pilippukkal Thaesamengkum Ezhumba Vaentum 4.aathisapai Arpudhanggal Ataiyaalanggal Anraadam Natakka Vaentum Yesu Naamatthil Kurudarkal Paarkkanum Sevidarkal Kaetkanum Mudavarkal Natakkanumae 5.varumaiyae Illaadha Thamizhnaatu Vanmuraiyae Illaadha Thamizhnaatu Neethiyum Naermaiyum Thooymaiyum Anpum Niraindha Thamizhnaatu Pozhindharulum Thamizhnaatu Engkum Apishaegam Perumazhaiyaay-2 Manraati Jepikkiraen Thirappin Vaasalil Ninru 6.panjjamae Illaadha Paaratha Thaesam Paavamae Illaadha Paaratha Thaesam Oozhalkal Kurtranggal Saabanggal Noykal Illaadha Paaratha Thaesam Pozhindharulum Thaesamengkum Apishaegam Perumazhaiyaay-2 Manraati Jepikkiraen Thirappin Vaasalil Ninru