பாடல் #2926
நல்ல போராட்டம் போராடு
🔤 Nalla Poraattam Poraatu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்ல போராட்டம் போராடு - யேசு நாதரிலுள்ள விசுவாசம் வைத்தோடு. பொல்லா உலகத்தை நீ விட்டுப் போடு பூரண தேவ பலத்தை மன்றாடு. 1. சத்திய வார்க் கச்சை கட்டு - தேவ சர்வாயுதவர்க்கம் பற்றிக் கைக்கொட்டு சுத்த சுவிசேடப் பட்டயந் தொட்டு தொல்லுல காதிபதியைத் துரத்து. 2. நீதிமார்க் கவசத்தைப் பூட்டு - காலில் ஆயத்த பாதரட்சையைப் போட்டு நடு ராத்திரியில் பத்திரமாயிருந்து பஞ்சைப் பசாசின் பரிவாரம் ஓட்டு. 3. ஜெப தப தூபங்கள் ஏற்று - யேசு சிந்திய செந்நீர் துளிகளைப் பாரு விபரீத சிந்தையேன்? நுP மனந்திரும்பு வேந்தன் கிறிஸ்துவக்கே ஜெயங்கூறு. 4. கர்த்தருன் கவலையைத் தீர்ப்பார் உந்தன் காலடி சற்றும் வழுவாது பார்ப்பார் அர்த்த ராத்திரியில் ஆபத்தில் காப்பார் ஆனந்தப் பதவியில் உன்னையும் சேர்ப்பார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nalla Poraattam Poraatu - Yaesu Naadharilulla Visuvaasam Vaitthotu. Pollaa Ulakatthai Nee Vittup Potu Poorana Thaeva Palatthai Manraatu. 1. Satthiya Vaark Kachsai Kattu - Thaeva Sarvaayudhavarkkam Parrik Kaikkottu Suttha Suvisaedap Pattayan Thottu Thollula Kaathibathiyaith Thuratthu. 2. Neethimaark Kavasatthaip Poottu - Kaalil Aayattha Paadharatsaiyaip Pottu Natu Raatthiriyil Patthiramaayirunthu Panjsaip Pasaasin Parivaaram Ottu. 3. Jeba Thapa Thoobanggal Aerru - Yaesu Sinthiya Senneer Thuligalaip Paaru Vibareedha Sinthaiyaen? NuP Mananthirumpu Vaendhan Kiristhuvakkae Jeyangkooru. 4. Karttharun Kavalaiyaith Theerppaar Undhan Kaalati Sarrum Vazhuvaathu Paarppaar Arttha Raatthiriyil Aabatthil Kaappaar Aanandhap Pathaviyil Unnaiyum Saerppaar.