பாடல் #2923
நல்ல தேவனே
🔤 Nalla Devanae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.நல்ல தேவனே, ஞான ஜீவனே, வல்ல உமது கருணை தன்னை வாழ்த்திப் போற்றுவேன். 2.போன ராவிலே பொல்லாங்கின்றியே, ஆன நல்ல அருளினாலே அன்பாய்க் காத்தீரே. 3.காலையைக் கண்டேன், கர்த்தா உம்மையே சாலவும் துதித்துப் போற்றிச் சார்ந்து கொள்ளுவேன். 4.சென்ற ராவதின் இருளைப்போலவே, என்றன் பாவ இருளைப்போக்கி, இலங்கப் பண்ணுமே! 5.இன்று நானுமே இன்பமாகவே, உன்றன் வழியில் நடக்கக் கருணை உதவவேணுமே! 6.ஒளியின் பிள்ளையாய் ஊக்கமாகவே, எளியன் இன்றும் நடக்க, ஆவி ஈந்தருளுமே! 7.கையைக் காவுமே, கண்ணைக் காவுமே! மெய்யைக் காத்து என்றன் மனதை மிகவும் காவுமே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.nalla Devanae, Njaana Jeevanae, Valla Umathu Karunai Thannai Vaazhtthip Porruvaen. 2.pona Raavilae Pollaangkinriyae, Aana Nalla Arulinaalae Anpaayk Kaattheerae. 3.kaalaiyaik Kantaen, Kartthaa Ummaiyae Saalavum Thuthitthup Porrich Saarnthu Kolluvaen. 4.sendra Raavathin Irulaippolavae, Endran Paava Irulaippokki, Ilanggap Pannumae! 5.inru Naanumae Inbamaagavae, Undran Vazhiyil Natakkak Karunai Udhavavaenumae! 6.oliyin Pillaiyaay Ookkamaagavae, Eliyan Inrum Natakka, Aavi Eendharulumae! 7.kaiyaik Kaavumae, Kannaik Kaavumae! Meyyaik Kaatthu Endran Manathai Migavum Kaavumae!