பாடல் #2921
நல்ல சாட்சியாய் நீ
🔤 Nalla Saatsiyaay Nee
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்ல சாட்சியாய் நீ தேவனுக்காய் தீங்கு அனுபவி வல்ல சாட்சியாய் நீ தேவனுக்காய் வாழ்ந்து மகிழ்ந்திடு நீங்களே எனக்குச் சாட்சிகள் என்றீர் இயேசுவே! நாங்களும் உமக்கு சாட்சிகள் சிலுவையின் சாட்சிகள் நம் வாழ்வை மற்றவர் பார்த்துக் கூறும் நல்ல சாட்சிகள் இயேசுவின் அன்பைப் பிரதிபலிக்கும் நீதியின் சாட்சிகள் இயேசு ராஜனின் திருவடிச் சுவட்டைத் தொடரும் உண்மை சாட்சிகள் சிலுவைக் கொடியை உயர்த்தி ஜீவனையும் தரும் சத்திய சாட்சிகள் தன்னை மறைத்து கிறிஸ்துவைக் காட்டும் உத்தம சாட்சிகள் ஆத்தும பாரத்தை அகத்தினில் கொண்ட அன்பின் சாட்சிகள் இயேசு கிறிஸ்துவின் பாடுகளைச் சுமந்து செல்லும் வெற்றியின் சாட்சிகள் கோதுமை மணியாய் வீழ்ந்து மடியும் இரத்தச் சாட்சிகள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nalla Saatsiyaay Nee Devanukkaay Theengku Anubavi Valla Saatsiyaay Nee Devanukkaay Vaazhnthu Makizhnthitu Neenggalae Enakkuch Saatsigal Enreer Yesuvae! Naanggalum Umakku Saatsigal Siluvaiyin Saatsigal Nam Vaazhvai Martravar Paartthuk Koorum Nalla Saatsigal Yesuvin Anpaip Pirathibalikkum Neethiyin Saatsigal Yesu Raajanin Thiruvatich Suvattaith Thodarum Unmai Saatsigal Siluvaik Kotiyai Uyartthi Jeevanaiyum Tharum Satthiya Saatsigal Thannai Maraitthu Kiristhuvaik Kaattum Utthama Saatsigal Aatthuma Paaratthai Agatthinil Konda Anpin Saatsigal Yesu Kiristhuvin Paatugalaich Sumanthu Sellum Verriyin Saatsigal Kothumai Maniyaay Veezhnthu Matiyum Ratthach Saatsigal