பாடல் #2901
நம்பினேன் உன தடிமை நான் ஐயா
🔤 Nampinaen Una Thatimai Naan Aiyaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம்பி னேன், உன தடிமை நான், ஐயா!, - திடப் படுத்தி என்றனை - நடத்திக் காப்ப துன் கடமை தான், ஐயா. உம்பரும் புவி நண்பரும் மற்ற உயிர்களும் பல பொருள்களும் தொழும் தம்பிரானே, மெய் யம்பராபரா, தாசன் மீது நன் னேச அருள் செய். - நம்பி 1.தீதாம் என் பாவம் யாவையும் பொறுத்து, - திருக் கருணையின் அருள் செய்து பின் வரும் இடர்களை அறுத்து, வேதாகமப்படி என்னைத் தான் வெறுத்து - நான் உனைப்பின் செல்ல, உன் மெய் அருளை என் உள்ளத்தில் நிறுத்து; ஆதாரம் எனக்கார், உனை அன்றி? அம்புவியில் யான் நம்ப வேறுண்டோ? - உன் பாதா தாரத்தில் ஒதுங்கினேன்; எனைப் பாரும் கிருபையைத் தாரும், ஐயனே! - நம்பி 2.சுத்த இருதயத்தினைத் தருவாய்; - பரிபூரணானந்த ஜோதி ஆவியின் நல்துணை அருள்வாய், நித்தமும் பய பக்தியைத் தருவாய்; - நான் ஊழியம் செய்ய, நீதனே, எந்தன்முன் எழுந்தருளாய்; அத்தனும் பரிசுத்தனும் என தன்பனும் அனு கூலனுமான பக்தனே; பரிசுத்தனே, உனைப் பாடினேன்; கிருபை சூடி ஆள், ஐயா! - நம்பி 3.ஊக்கமும் மனத்தீர்க்கமும் வேணும் - சுவிசேஷ உரையை உற்றுப் பார்த்ததில் தேறவும் வேணும்; ஆக்கமும் அன்பர்ச் சேர்க்கையும் வேணும்; - உனக்கூழியம் செய்ய ஆவியும் அதின் ஈவதும் வேணும்; ஏக்கமும் மனக்கவலையும் நித்ய இன்பமுள்ள உன் அன்பின் நல்திரு வாக்கையே நோக்கி இருப்பதால் என்முன் வாரும், கிருபை தாரும், ஐயனே! - நம்பி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nampi Naen, Una Thatimai Naan, Aiyaa!, - Thidap Patutthi Endranai - Natatthik Kaappa Thun Katamai Thaan, Aiyaa. Umbarum Puvi Nanparum Martra Uyirkalum Pala Porulkalum Thozhum Thampiraanae, Mey Yambaraabaraa, Thaasan Meethu Nan Naesa Arul Sey. - Nampi 1.theethaam En Paavam Yaavaiyum Porutthu, - Thiruk Karunaiyin Arul Seythu Pin Varum Idarkalai Arutthu, Vaethaagamappati Ennaith Thaan Verutthu - Naan Unaippin Sella, Un Mey Arulai En Ullatthil Nirutthu; Aathaaram Enakkaar, Unai Anri? Ampuviyil Yaan Namba Vaerunto? - Un Paathaa Thaaratthil Othungkinaen; Enaip Paarum Kirupaiyaith Thaarum, Aiyanae! - Nampi 2.suttha Irudhayatthinaith Tharuvaay; - Paripooranaanandha Jothi Aaviyin Nalthunai Arulvaay, Nitthamum Paya Pakthiyaith Tharuvaay; - Naan Oozhiyam Seyya, Needhanae, Endhanmun Ezhundharulaay; Atthanum Parisutthanum Ena Thanbanum Anu Koolanumaana Pakthanae; Parisutthanae, Unaip Paatinaen; Kirupai Sooti Aal, Aiyaa! - Nampi 3.ookkamum Manattheerkkamum Vaenum - Suvisaesha Uraiyai Urrup Paartthathil Thaeravum Vaenum; Aakkamum Anbarch Saerkkaiyum Vaenum; - Unakkoozhiyam Seyya Aaviyum Athin Eevathum Vaenum; Aekkamum Manakkavalaiyum Nithya Inbamulla Un Anpin Nalthiru Vaakkaiyae Nokki Iruppathaal Enmun Vaarum, Kirupai Thaarum, Aiyanae! - Nampi