பாடல் #28988
பெந்தெ கொஸ்தின் ஜீவியமே
🔤 Penthe Kosthin Jeeviyamae
🎙 சாது. G. தேவநேசன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெந்தெ கொஸ்தின் ஜீவியமே பாரில் பாக்கியம் ஆன ஜீவியமே பரலோக நாதன் பாரினிலே அவதரித்ததின் காரணமே - 2 பெந்தெ கொஸ்தின் அனுபவம் - 2 மானிடர் யாவரும் அடைந்திடவே பெந்தெகொஸ்தே அனுபவம் என்றால் கருத்தை நன்றாக அறிந்திடுவாய் - 2 ஆன்மீக வாழ்வின் அனுபவம் ஆவிக்குரிய ஜீவியமாம் - 2 மகிமை அடைந்த ஜீவியமாம் - 2 பரலோகத்திற்கேற்ற ஜீவியமாம் கிறிஸ்துவின் சரீர வாழ்க்கையிலே உலகத்தில் இருந்த காலத்திலே - 2 வெளிப்பட்ட ஜீவியம் தானே பெந்தெகொஸ்தின் அனுபவமே - 2 மானிடர் யாவரும் பெற்றிடவே - 2 மானிலத்தில் அதைக் காண்பித்தாரே கிறிஸ்து சீடரை அழைத்ததுமே அனுபவத்தை கற்றுக் கொடுத்திடவே - 2 சீடரைக் கொண்டு நடந்ததுமே அடிக்கடி போதனை கொடுத்ததுமே பெந்தெகொஸ்தே அனுபவத்தை - 2 அடைந்திட தகுதிப் பட்டிடவே கெத்சமனே தோட்டம் முதல் கல்வாரி மலை தான் வரைக்கும் - 2 அவர் திரு இரத்தம் சிந்தினதின் நோக்கம் என்ன அறி மானிடனே - 2 பாக்கியமான ஜீவியத்தை - 2 பாரினில் ஸ்தாபித மாக்கிடவே கிறிஸ்து நொறுக்கப்பட்டது ஈன சிலுவை சுமந்தது - 2 குருசினில் அடிக்கப்பட்டதுமே மூன்றாணியில் தொங்கி மரித்ததுமே - 2 மூன்றாம் நாள் உயிரோடெழுந்ததுமே - 2 மானிடர் யாவரும் பெற்றிடவே வாக்குத்தத்தத்தின் வல்லமையாம் உன்னதத்தின் பெலனிதுவாம் - 2 காத்திருந்து பெற்றிடவே கட்டளை கொடுத்தார் சீஷருக்கு - 2 காத்திருந்தார் நூற்றிருபதுபேர் - 2 ஐம்பதாம் நாளதில் அடைந்தனரே அன்னியபாஷை அடையாளமாம் சரீர அசைவும் அடையாளமாம் - 2 பரிசுத்த வாழ்க்கைக்கு வல்லமையாம் பரிசுத்தவான்களின் அதிகாரம் - 2 விசுவாசத்திற்கு ஆரோக்கியம் - 2 சத்தியத்திற்குள் நடந்திடும் ஜீவியமாம் பாவத்திற்கு மரித்து நீதிக்கு பிழைத்து ஜீவிக்கும் அனுபவமாம் - 2 பாவம் அற்ற ஜீவியம் பரிசுத்த வாழ்க்கையின் ஜீவியம் - 2 நற்சாட்சி பெற்றிடும் ஜீவியமாம் - 2 நாதரைக் காண்பிக்கும் ஜீவியமாம் பரிகாசம் நிந்தை சகித்திடும் ஜீவியம் உபத்திரவம் பொறுத்திடும் ஜீவியம்! - 2 சத்ருவை சினேகிக்கும் ஜீவியமாம் பிறர் மேல் அன்பு கூரும் ஜீவியமாம் - 2 ஒரு குளத்தில் அறைந்திடுவோர்க்கு - 2 மறு கன்னத்தைக் காண்பிக்கும் ஜீவியமாம் யாவரும் அதை பெற்றிடவே தேவன் அழைக்கிறார் வந்துவிடுங்கள் விசுவாசத்துடன் வந்திடுங்கள் கேட்டு அதனைப் பெற்றிடுங்கள் - 2 கேட்கிறேன் பெறுவான் என்றனரே - 2 வாக்கு மாறா வல்லவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Penthe Kosthin Jeeviyamae Paaril Paakkiyam Aana Jeeviyamae Paraloga Naadhan Paarinilae Avatharitthathin Kaaranamae - 2 Penthe Kosthin Anubavam - 2 Maanidar Yaavarum Atainthidavae Penthekosthae Anubavam Enraal Karutthai Nanraaga Arinthituvaay - 2 Aanmeega Vaazhvin Anubavam Aavikkuriya Jeeviyamaam - 2 Makimai Ataindha Jeeviyamaam - 2 Paralogatthirkaertra Jeeviyamaam Kiristhuvin Sareera Vaazhkkaiyilae Ulakatthil Irundha Kaalatthilae - 2 Velippatta Jeeviyam Thaanae Penthekosthin Anubavamae - 2 Maanidar Yaavarum Perridavae - 2 Maanilatthil Athaik Kaanpitthaarae Kiristhu Seedarai Azhaitthathumae Anubavatthai Karruk Kotutthidavae - 2 Seedaraik Kontu Natandhathumae Atikkati Podhanai Kotutthathumae Penthekosthae Anubavatthai - 2 Atainthida Thakuthip Pattidavae Kethsamanae Thottam Mudhal Kalvaari Malai Thaan Varaikkum - 2 Avar Thiru Rattham Sinthinathin Nokkam Enna Ari Maanidanae - 2 Paakkiyamaana Jeeviyatthai - 2 Paarinil Sthaapidha Maakkidavae Kiristhu Norukkappattathu Eena Siluvai Sumandhathu - 2 Kurusinil Atikkappattathumae Moonraaniyil Thongki Maritthathumae - 2 Moonraam Naal Uyirotezhundhathumae - 2 Maanidar Yaavarum Perridavae Vaakkutthatthatthin Vallamaiyaam Unnathatthin Pelanithuvaam - 2 Kaatthirunthu Perridavae Kattalai Kotutthaar Seesharukku - 2 Kaatthirunthaar Noorrirubathupaer - 2 Aimbathaam Naalathil Ataindhanarae Anniyapaashai Ataiyaalamaam Sareera Asaivum Ataiyaalamaam - 2 Parisuttha Vaazhkkaikku Vallamaiyaam Parisutthavaankalin Athikaaram - 2 Visuvaasatthirku Aarokkiyam - 2 Satthiyatthirkul Natanthitum Jeeviyamaam Paavatthirku Maritthu Neethikku Pizhaitthu Jeevikkum Anubavamaam - 2 Paavam Artra Jeeviyam Parisuttha Vaazhkkaiyin Jeeviyam - 2 Narsaatsi Perritum Jeeviyamaam - 2 Naadharaik Kaanpikkum Jeeviyamaam Parikaasam Ninthai Sakitthitum Jeeviyam Ubatthiravam Porutthitum Jeeviyam! - 2 Sathruvai Sinaekikkum Jeeviyamaam Pirar Mael Anpu Koorum Jeeviyamaam - 2 Oru Kulatthil Arainthituvorkku - 2 Maru Kannatthaik Kaanpikkum Jeeviyamaam Yaavarum Athai Perridavae Devan Azhaikkiraar Vanthuvitunggal Visuvaasatthudan Vanthitunggal Kaettu Adhanaip Perritunggal - 2 Kaetkiraen Peruvaan Endranarae - 2 Vaakku Maaraa Vallavarae