பாடல் #2863
நன்றி நன்றி என்று சொல்லி
🔤 Nanri Nanri Enru Solli
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி நன்றி என்று சொல்லி நானும் பாடுவேன் நாதா உம்மை எண்ணித் துதித்திடுவேன் நீரே எந்தன் துணையப்பா இல்லை உமக்கு நிகரப்பா துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும் இன்பங்கள் எந்தன் வாழ்வில் இல்லாமல் போனாலும் நாதியற்ற மனுஷனுக்கு நீதியுள்ள தெய்வமப்பா நம்பினோரை பாதுகாத்து வாழவைக்கும் தேவனப்பா தாகம் தீர்க்கும் ஜீவநதி தரை இறங்கி வந்தீரே ஜீவ அப்பம் ஜீவ தண்ணீர் தந்து என்னை போஷித்தீரே இருப்பவராய் இருப்பவரே எனக்குள்ளே வாழ்பவரே ஏழை எந்தன் குறைவுகள் எல்லாம் நிறைவாக்கும் நல்லவரே சோர்ந்து போன நேரத்திலே புதிய பெலன் தந்தீரே சோதனயை சகித்து வாழ புதிய கிருபை அளித்தீரே இழந்து போன சகலத்தையும் திரும்ப எனக்கு தந்தவரே இரட்டிபப்பான நன்மைகளாலே திருப்தியாக்கி மகிழ்ந்தவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Nanri Enru Solli Naanum Paatuvaen Naathaa Ummai Ennith Thuthitthituvaen Neerae Endhan Thunaiyappaa Illai Umakku Nigarappaa Thunbanggal Vanthaalum Thuyaranggal Soozhnthaalum Inbanggal Endhan Vaazhvil Illaamal Ponaalum Naathiyartra Manushanukku Neethiyulla Theyvamappaa Nampinorai Paathukaatthu Vaazhavaikkum Devanappaa Thaagam Theerkkum Jeevanathi Tharai Irangki Vantheerae Jeeva Appam Jeeva Thanneer Thanthu Ennai Poshittheerae Iruppavaraay Iruppavarae Enakkullae Vaazhpavarae Aezhai Endhan Kuraivugal Ellaam Niraivaakkum Nallavarae Sornthu Pona Naeratthilae Puthiya Pelan Thantheerae Sodhanayai Sakitthu Vaazha Puthiya Kirupai Alittheerae Izhanthu Pona Sakalatthaiyum Thirumba Enakku Thandhavarae Irattibappaana Nanmaigalaalae Thirupthiyaakki Makizhndhavarae