பாடல் #285
அளவிட முடியாத அன்பாலே
🔤 Alavida Mutiyaadha Anpaalae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அளவிட முடியா அன்பாலே ஆண்டவரே எம்மை அழைத்தீரே இகமதில் பாவங்கள் பறந்தோட இயேசுவாய் மண்ணில் பிறந்தீரே அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா ராஜனுக்கே பிறவியில் நாமும் பாவியன்றோ-எம் பிழைதனை நீரும் பொறுப்பீரே பாவமில்லாத ஒரு உடல் எடுத்து-எங்கள் பாலகன் இயேசுவாய் வந்தவரே நீதியின் தேவன் நீரன்றோ-வழி மாறிடும் நமக்கிங்கு ஆயனன்றோ தூயவரே உம் கருணையினை-நாம் துதிக்கின்ற வரம்தனைத் தந்துவிடும் எமக்காய் மரித்த தேவனல்லோ-நீர் நமக்காய் உயிர்த்த தெயவமல்லோ பிறர்க்காய் வாழ்ந்திடு என்றவரே-நல்ல பேரின்பப் போதனை தந்தவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Alavida Mutiyaa Anpaalae Aandavarae Emmai Azhaittheerae Igamathil Paavanggal Paranthoda Yesuvaay Mannil Pirantheerae Allaelooyaa Devanukkae Allaelooyaa Raajanukkae Piraviyil Naamum Paaviyanro-em Pizhaidhanai Neerum Poruppeerae Paavamillaadha Oru Udal Etutthu-enggal Paalakan Yesuvaay Vandhavarae Neethiyin Devan Neeranro-vazhi Maaritum Namakkingku Aayananro Thooyavarae Um Karunaiyinai-naam Thuthikkindra Varamthanaith Thanthuvitum Emakkaay Marittha Devanallo-neer Namakkaay Uyirttha Theyavamallo Pirarkkaay Vaazhnthitu Endravarae-nalla Paerinbap Podhanai Thandhavarae