பாடல் #2842
நன்மை மூலனே நம் நேய சீலனே
🔤 Nanmai Moolanae Nam Naeya Seelanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நன்மை மூலனே - நம் நேய சீலனே மைந்தர் பேரிலிந்த வேளை வந்திறங்குமே. 2. போர் அதிகமாய் மும்மரிக்குதே சோர்வடையா ஆவியை நீர் ஊற்றிக் காத்திடும் 3. ஆத்துமா மிகத் தத்தளிக்குதே காத்து என்னை ஆற்றி இப்போ தேற்றிட வாரும். 4. துன்பம் வந்தாலோ - துயர மின்றியே இன்பமாய் நிலைத்து நிற்க வந்திறங்குமே. 5. இருளாய்த் தோன்றுதே அருளைத் தாருமே பரத்தின் ஜோதி எனக்குள் வீசக் கிருபை கூருமே. 6. எந்தன் நம்பிக்கை உம்மில் தான் ஐயா! நம்பி என்னை முற்றுமாகத் தத்தம் செய்கிறேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Nanmai Moolanae - Nam Naeya Seelanae Maindhar Paerilindha Vaelai Vanthirangkumae. 2. Por Athigamaay Mummarikkuthae Sorvataiyaa Aaviyai Neer Oorrik Kaatthitum 3. Aatthumaa Migath Thatthalikkuthae Kaatthu Ennai Aarri Ippo Thaerrida Vaarum. 4. Thunbam Vanthaalo - Thuyara Minriyae Inbamaay Nilaitthu Nirka Vanthirangkumae. 5. Irulaayth Thonruthae Arulaith Thaarumae Paratthin Jothi Enakkul Veesak Kirupai Koorumae. 6. Endhan Nampikkai Ummil Thaan Aiyaa! Nampi Ennai Murrumaagath Thattham Seykiraen.