பாடல் #2832
தோழரே சேர்ந்து வாழுங்கள் தேவனை
🔤 Thozharae Saernthu Vaazhunggal Devanai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தோழரே சேர்ந்து வாழுங்கள் தேவனை புகழ்ந்து பாடுங்கள் சேனையின் தேவன் நல்லவர் (3) என்றல்லேலூயா சொல்லிப் பாடுங்கள். 1. காவலர் தளர்ந்து போய் பலசாலிகள் கூனிப்போமுனும் கிண்ணிகள் நசுங்கி போமுனும் கேட்பவர் குன்றிப் போமுனும் பார்ப்பவர் மறைந்துப் போமுனும் ஆதரவான யேசு நாதனை வாலிபத்தில் நீர் நினைத்திடும். 2. கடைசி நாள் வரும்போது நீர் சுத்தராய் ஆர்ப்பரிக்கவும் பேரிகை தொனிக்கக்கேட்கவும் தேவனைத் தரிசித்தாளவும் மோட்சத்தில் பங்கடையவும் வால வயதில் ஜீவ நதியில் தாகந்தீர்ந்து உம் பாவம் நீக்கிடும் 3. மைந்தனார் பாதத்தைப் போற்றி நல் விந்தையாய்ச் சிறந்து நல்வேத மந்தையில் சேர்ந்திடும் திரு வேந்தனை வணங்கிடும் பரிசுத்தனைப் போற்றிடும் மறு லோகமதனில் தூத சேனையோடேகி மாமகிழ்வோடு வாழலாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thozharae Saernthu Vaazhunggal Devanai Pugazhnthu Paatunggal Saenaiyin Devan Nallavar (3) Endrallaelooyaa Sollip Paatunggal. 1. Kaavalar Thalarnthu Poy Palasaaligal Koonippomunum Kinnigal Nasungki Pomunum Kaetpavar Kunrip Pomunum Paarppavar Marainthup Pomunum Aadharavaana Yaesu Naadhanai Vaalibatthil Neer Ninaitthitum. 2. Kataisi Naal Varumpothu Neer Suttharaay Aarpparikkavum Paerikai Thonikkakkaetkavum Devanaith Tharisitthaalavum Motsatthil Panggataiyavum Vaala Vayathil Jeeva Nathiyil Thaagantheernthu Um Paavam Neekkitum 3. Maindhanaar Paadhatthaip Porri Nal Vinthaiyaaych Siranthu Nalvaedha Manthaiyil Saernthitum Thiru Vaendhanai Vanangkitum Parisutthanaip Porritum Maru Logamathanil Thoodha Saenaiyotaeki Maamakizhvotu Vaazhalaam