பாடல் #2829
எத்தனை ஆபத்து சோதனைகள்
🎙 கிறிஸ்தவ பாடல்
1. எத்தனை ஆபத்து சோதனைகள் எமக்கு நேரிட்ட பல இடர்கள் அத்தனையும் எமை அணுகாமல் ஆதரித்தீர் பிழை நினையாமல். 2. ஆனந்தத்துடன் புது வருடம் ஆரம்பித்தோம் ஆவலுடன் நானிலம் புரக்க அவதரித்த நாதனைப் புகழ்வோம் நன்றியுடன். 3. இப்புது ஆண்டினில் அடியார்க்கு இகபர நன்மைகள் அனுக்கிரகித்து அப்பனே கிருபையின் செட்டையின் கீழ் அற்புதமா யணைத் தாதரிப்பாய் 4. வெற்றியாய் யுத்தத்தில் முன் செல்ல வெகுவாய் ஆத்ம ஜெயங்கள் கொள்ள பக்தியாய் நடந்து நின் பாதை செல்ல பகருவீர் உன்னத வரங்கள் சொல்ல 5. தேசங்கள் வழியே தீமையற தேவனைத் தேடியே தோஷமற ஓசன்னா பாடியே ஆசையுடன் உய்யவே அருள்வாய் துன்பமற.