பாடல் #2823
தோத்திரம் செய்வேனே
🔤 Thotthiram Seyvaenae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தோத்திரம் செய்வேனே, - ரட்சகனைத் தோத்திரம் செய்வேனே. பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த பார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும் - தோத்திரம் 1. அன்னை மரி சுதனை - புல்மீது அமிழ்துக் கழுதவனை, முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை, முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை - தோத்திரம் 2. கந்தை பொதிந்தவனை - வானோர்களும் வந்தடி பணிபவனை, மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை, வான பரன் என்னும் ஞான குணவானை - தோத்திரம் 3. செம்பொன் னுருவானைத் - தேசிகர்கள் தேடும் குருவானை, அம்பர மேவிய உம்பர் கணத்தோடு அன்பு பெற நின்று, பைம் பொன் மலர் தூவி - தோத்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thotthiram Seyvaenae, - Ratsakanaith Thotthiram Seyvaenae. Paatthiramaakka Immaathram Karunaivaittha Paartthibanai Yoodhak Kotthiranai, Enrum - Thotthiram 1. Annai Mari Sudhanai - Pulmeethu Amizhthuk Kazhudhavanai, Munnanai Meethurtra Sinnak Kumaaranai, Munnurai Noorpati Innilath Thurronai - Thotthiram 2. Kanthai Pothindhavanai - Vaanorkalum Vandhati Panibavanai, Manthaiyark Kaanandha Maatsiyayalitthonai, Vaana Paran Ennum Njaana Kunavaanai - Thotthiram 3. Sempon Nuruvaanaith - Thaesigarkal Thaetum Kuruvaanai, Ambara Maeviya Umbar Kanatthotu Anpu Pera Ninru, Paim Pon Malar Thoovi - Thotthiram