பாடல் #2822
தோத்திரம் கிருபை
🔤 Thotthiram Kirupai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தோத்திரம்! க்ருபை கூர், ஐயா! விழி பார், ஐயா; விழி பார், ஐயா! 1.பாத்திரம் இலா எனை நேத்திரம் என உச்சிதமாய்க் காத்து வந்திடும்; எனது கர்த்தாதி கர்த்தனே! - தோத்திரம் 2.இந்த நாள் அளவிலும் வந்த துன்பம் யாவுமே என்றனை விட்டகலவே இரங்கிய தேவனே! - தோத்திரம் 3.மனதிலும் வாக்கிலும் மட்டில்லாத பாவி நான்; எனது தீதகற்றி ஆளும், ஏகாம்பர நாதனே! - தோத்திரம் 4.போதனே, நீதனே, புனித சத்ய வேதனே, கீதனே, தாசர் துதி கேளும், யேசு நாதனே! - தோத்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thotthiram! Krupai Koor, Aiyaa! Vizhi Paar, Aiyaa; Vizhi Paar, Aiyaa! 1.paatthiram Ilaa Enai Naetthiram Ena Uchsidhamaayk Kaatthu Vanthitum; Enathu Kartthaathi Kartthanae! - Thotthiram 2.indha Naal Alavilum Vandha Thunbam Yaavumae Endranai Vittakalavae Irangkiya Devanae! - Thotthiram 3.manathilum Vaakkilum Mattillaadha Paavi Naan; Enathu Theedhakarri Aalum, Aekaambara Naadhanae! - Thotthiram 4.podhanae, Needhanae, Punidha Sathya Vaedhanae, Keedhanae, Thaasar Thuthi Kaelum, Yaesu Naadhanae! - Thotthiram