பாடல் #2819
தோத்திரக் காணிக்கையை தேவா
🔤 Thotthirak Kaanikkaiyai Thaevaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தோத்திரக் காணிக்கையை தேவா துதியுடன் ஏற்றுக் கொள்ளும் சொற்பமாய் அளிக்கும் இந்த நன்றியை கிருபையாய் ஏற்றுக் கொள்ளும். 1. தாயின் வயிற்றினின்று என்னைப் பிரித்து அழைத்தவரே முற்றிலும் காப்பாற்றி ரட்சித்து வந்தீர் முன்னாளின் வாக்குப்படி. 2. பயங்கரக் குழியினின்றும் என்னை உளையான சேற்றினின்றும் தூக்கியெடுத்துக் கால்களை நிறுத்தி துணை செய்த வல்லவனே! 3. வந்த வியாதி துன்பம் எல்லாம் விட்டு அகன்றிடவே; வழிகள் செய்து வசனமும் அளித்து வாக்குறுதி கொடுத்தவனே! 4. புதுப்பாட்டால் துதிக்க உம்மை என் வாயைத் தொட்டருளும் ஸ்வாமி; தேடி ஆராய்ந்து உமது அன்பைப் புகழாதிருப்பேனோ! 5. மகிமையும் மகத்துவமும் கனம் வலுமையும் யேசுவுக்கே. வானங்கள் மகிழ்ந்திட பூமி பூரிக்க போற்றித் தொழுவோம் நாங்கள்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thotthirak Kaanikkaiyai Thaevaa Thuthiyudan Aerruk Kollum Sorpamaay Alikkum Indha Nanriyai Kirupaiyaay Aerruk Kollum. 1. Thaayin Vayirrininru Ennaip Piritthu Azhaitthavarae Murrilum Kaappaarri Ratsitthu Vantheer Munnaalin Vaakkuppati. 2. Payanggarak Kuzhiyininrum Ennai Ulaiyaana Saerrininrum Thookkiyetutthuk Kaalkalai Nirutthi Thunai Seytha Vallavanae! 3. Vandha Viyaathi Thunbam Ellaam Vittu Aganridavae; Vazhigal Seythu Vasanamum Alitthu Vaakkuruthi Kotutthavanae! 4. Puthuppaattaal Thuthikka Ummai En Vaayaith Thottarulum Svaami; Thaeti Aaraaynthu Umathu Anpaip Pugazhaathiruppaeno! 5. Makimaiyum Makatthuvamum Kanam Valumaiyum Yaesuvukkae. Vaananggal Makizhnthida Poomi Poorikka Porrith Thozhuvom Naanggal.