பாடல் #28142
கொல்கொதாவின் குருசினிலே
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
கொல்கொதாவின் குருசினிலே குருதி வெள்ளம் பாய்ந்திடுதே கள்ளன் என் பாவம் கழுவிடவே – அவர் கால் கரம் மார்பினில் கசிகின்றதே ஈடில்லை இணையுமில்லை இயேசு என் நேசரைப்போல் எவருமில்லை உதிரம் வியர்வையாகி மேனியிலே பெருகுதையா கல்வாரி கொடுமை கண்டு எனது உள்ளம் உருகுதையா ஏனிந்தபாடுகள் எனக்காய்தானோ – கொல்கொதாவின் மகிமையின் தேவன் மனிதர் முன்னே மனங்கசந்தழுது நின்றார் மா – கொடுமை வாரடி வாதையாலே வாடி சிதைந்த மேனியது கல்வாரி பார சிலுவை சுமந்து நடந்த பாதையது ஏனிந்த பாடுகள் உனக்காய் தானோ – கொள்கொதாவின் பரம சுகம் தரும் உதிரம் ஊற்றென பாய்ந்திடுதே சிலுவையிலே காளை வெள்ளாட்டு கடா தீர்த்திடாத பாவவினை கல்வாரி சிலுவை அன்பு நித்திய லோகம் சேர்க்கும் உன்னை ஏனிந்த பாடுகள் நமக்காய்தானோ அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா [2]