பாடல் #2806
தேவாவியே இரக்கமாய் என்னில்
🎙 கிறிஸ்தவ பாடல்
1. தேவாவியே இரக்கமாய் என்னில் ப்ரகாசியும். என் நெஞ்சின் இருளை அன்பாய் விலக்கி ரட்சியும். 2. என் மீட்பர் திவ்ய முகத்தை அன்பாகக் காண்பியும் எனக்குத் தேவ சித்தத்தை உணர்த்தியருளும். 3. துக்கம் நிறைந்த மனதைச் சந்தோஷப்படுத்தும் நொறுக்கப்பட்ட உள்ளத்தைச் சுகப்படுத்தும். 4. தேவாவியே இரக்கமாய் என் நெஞ்சை நிரப்பும் என்றைக்கும் என்னை முற்றுமாய் ஆட்கொண்டு நடத்தும்.