பாடல் #2798
தேவா இயேசு தேவா
🔤 Thaevaa Yesu Thaevaa
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா! இயேசு! தேவா - நானும் உன்னைத் தேடியே நித்தம் எந்தன் நெஞ்சில் பாடும் ராகம் கோடியே நீயே என் வாழ்வின் சொந்தம் நீ இன்றி வேறேது பந்தம் - தேவா! இயேசு! தேவா தாயைப் போல் என்னைத் தேற்றினீரய்யா தந்தைபோல் சுமந்தீரய்யா ஒயாமல உறங்காமல் தூங்காமல் என்னை ஒவ்வொரு நாளும் காத்தீரய்யா நல்ல தெய்வமே நன்றி மறப்பேனா இல்லையென்றாலும் உன்னை வெறுப்பேனா - தேவா! இயேசு! தேவா நீதிக்கு நீர் ஒரு சூரியன் தானோ நேசத்தில சந்திரனோ பாவிக்கு நீர் ஒரு இரட்சகன் தானோ பாசத்தில் நீர் ஒரு ஆகாயம் தானோ இதயராகமே உதயமானதே எனது நெஞ்சமே அபயமென்றதே - தேவா! இயேசு! தேவா உலகத்தில் உள்ளவர் வெறுக்கட்டுமே உம்மைத்தான் நம்பிவந்தேன் காரணம் இல்லாமல் பகைக்கட்டும் என்னை கர்த்தருக்குள்ளே நான் மகிந்திடுவேன் எனது வாழ்விலே மகிழ்ச்சி வந்தது உனது அன்பிலே என் ஜீவன் வாழுது - தேவா! இயேசு! தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa! Yesu! Thaevaa - Naanum Unnaith Thaetiyae Nittham Endhan Nenjsil Paatum Raagam Kotiyae Neeyae En Vaazhvin Sondham Nee Inri Vaeraethu Pandham - Thaevaa! Yesu! Thaevaa Thaayaip Pol Ennaith Thaerrineerayyaa Thanthaipol Sumantheerayyaa Oyaamala Urangkaamal Thoongkaamal Ennai Ovvoru Naalum Kaattheerayyaa Nalla Theyvamae Nanri Marappaenaa Illaiyenraalum Unnai Veruppaenaa - Thaevaa! Yesu! Thaevaa Neethikku Neer Oru Sooriyan Thaano Naesatthila Santhirano Paavikku Neer Oru Iratsakan Thaano Paasatthil Neer Oru Aakaayam Thaano Idhayaraagamae Udhayamaanathae Enathu Nenjjamae Abayamendrathae - Thaevaa! Yesu! Thaevaa Ulakatthil Ullavar Verukkattumae Ummaitthaan Nampivanthaen Kaaranam Illaamal Pakaikkattum Ennai Karttharukkullae Naan Makinthituvaen Enathu Vaazhvilae Makizhchsi Vandhathu Unathu Anpilae En Jeevan Vaazhuthu - Thaevaa! Yesu! Thaevaa