பாடல் #2792
தேவா எனைமறக்கா
🔤 Thaevaa Enaimarakkaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா எனைமறக்காதே, - இந்தச் சிறியன் படுந்துயரில் தூரநிற்காதே. நேயா உனையன்றி நீசனுக்கார் கதி? தூயா கிருபைகூர், நான் மகாதோஷி. - தேவா 1.வானுலகோர்தொழும் நாதா! - இந்த மானிடர்கரையேற வந்தசகாயா! காலைமாலைகள்தோறும் கரைந்து உருகுகின்ற கர்மசண்டாளனைக் கண்ணோக்க லாகாதா? - தேவா 2.பாவியின் மேலிரங்கையா! - பொல்லாப் பாதகனைக்கைவிடாதே நலமெய்யா! தாரணிதன்னில் தவிக்குமிவ் வேழையைத் தாங்கியா தரித்துந்தன் தயைபுரி ஐயா! - தேவா 3.என்மீறுதல் நினையாதே, எந்தன் இளமையின் பாவத்தை மனதில் வையாதே உன்பாதஞ்சேர்ந்தேன், உவந்தே னுனையடைந்தேன், நின்பாதந்தானே நிலையாகக் கண்டேன். - தேவா 4.நெருக்கப்படுகிறேன் தேவா, - என்னை உருக்கமாய்ப் பாராய், கிறிஸ்தேசுநாதா! இரக்கம் வைத்தென்றனின் குறைதன்னை நீக்கு, என்னை ஆட்கொண்டவா, இயேசு சர்வேசா! - தேவா 5.சரணம், சரணம், சருவேசா! - இந்தத் தருணம், தருணம் உன்றன் கருணை கூர் நேசா! மரணவேளையிலும் நடுத்தீர்வை தினத்திலும் மாபாதகன் எனை ரட்சியாய் நாதா! - தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Enaimarakkaathae, - Indhach Siriyan Patunthuyaril Thooranirkaathae. Naeyaa Unaiyanri Neesanukkaar Kathi? Thooyaa Kirupaikoor, Naan Makaathoshi. - Thaevaa 1.vaanulakorthozhum Naathaa! - Indha Maanidarkaraiyaera Vandhasakaayaa! Kaalaimaalaigalthorum Karainthu Urukukindra Karmasantaalanaik Kannokka Laakaathaa? - Thaevaa 2.paaviyin Maelirangkaiyaa! - Pollaap Paadhakanaikkaivitaathae Nalameyyaa! Thaaranidhannil Thavikkumiv Vaezhaiyaith Thaangkiyaa Tharitthundhan Thayaipuri Aiyaa! - Thaevaa 3.enmeerudhal Ninaiyaathae, Endhan Ilamaiyin Paavatthai Manathil Vaiyaathae Unpaadhanjsaernthaen, Uvanthae Nunaiyatainthaen, Ninpaadhanthaanae Nilaiyaagak Kantaen. - Thaevaa 4.nerukkappatukiraen Thaevaa, - Ennai Urukkamaayp Paaraay, Kiristhaesunaathaa! Irakkam Vaitthendranin Kuraidhannai Neekku, Ennai Aatkondavaa, Yesu Sarvaesaa! - Thaevaa 5.saranam, Saranam, Saruvaesaa! - Indhath Tharunam, Tharunam Undran Karunai Koor Naesaa! Maranavaelaiyilum Natuttheervai Thinatthilum Maapaadhakan Enai Ratsiyaay Naathaa! - Thaevaa