பாடல் #2779
தேவா இவ்வீட்டில்
🔤 Thaevaa Ivveettil
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா, இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து வரவே; - தயை செய்வாய், எமது கோவே! 1.மூவர் ஒருவரான தேவா; கிறிஸ்துநாதா, - எங்கள் முன்னவா, சத்ய வேதா! பூவில் எமக்குதவி யாருமில்லை, எம் தாதா; - யேசு புண்ணியனே, மா நீதா! - இங்கு நண்ணுவாய், மெய்ப் போதா; - தயை பண்ணுவாய், வினோதா! மேவி உனதருளை ஈவாய் இவ்வீட்டின் மீது, ஜீவனே, யேசு கோனே, - ஏழைப் பாவிகள் மீட்பன் தானே. - தேவா 2.விந்தையுடன் களிப்பும் சந்தமுடன் உண்டாக, - அதி மேன்மையுடன் சிநேகம் அந்தமுடன் பெருகி எந்தப் பாவமும் ஏக, - என்றும் அத்தனோ டுற வாக, - ஜெப துந்துமிகள் முழங்க, - ஐக்யம் பந்தமுடன் இலங்க, தந்தைப் பரனே, இன்று உன்றன் அருள் நிறைவாய்ச் சொந்தமுடன் ஈவாயே, - இவர் சந்ததம் வாழ நீயே. - தேவா 3.இங்கு வசிக்கும் மட்டும் துங்கன் மொழிக் கிசைந்தே, - பரன் இஷ்டப்படி நடந்தே, அங்கம், மனது யாவும் பங்கம்இன்றித் தொடர்ந்தே, - இவர் அனுதினமும் மகிழ்ந்தே, - உயர் அம்பர வீட்டில் சேர்ந்து, - மிகு கெம்பீரமாக வாழ்ந்து, புங்கமுடன் நிதமும் தங்கி யேசு பரனில் இங்கிதமாய்க் கொண்டாட, - நிதம் மங்களக் கவி பாட. - தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa, Ivveettil Inrae Maevi Ezhunthu Varavae; - Thayai Seyvaay, Emathu Kovae! 1.moovar Oruvaraana Thaevaa; Kiristhunaathaa, - Enggal Munnavaa, Sathya Vaethaa! Poovil Emakkudhavi Yaarumillai, Em Thaathaa; - Yaesu Punniyanae, Maa Neethaa! - Ingku Nannuvaay, Meyp Pothaa; - Thayai Pannuvaay, Vinothaa! Maevi Unatharulai Eevaay Ivveettin Meethu, Jeevanae, Yaesu Konae, - Aezhaip Paavigal Meetpan Thaanae. - Thaevaa 2.vinthaiyudan Kalippum Sandhamudan Untaaga, - Athi Maenmaiyudan Sinaegam Andhamudan Peruki Endhap Paavamum Aega, - Enrum Atthano Tura Vaaga, - Jeba Thunthumigal Muzhangga, - Aikyam Pandhamudan Ilangga, Thanthaip Paranae, Inru Undran Arul Niraivaaych Sondhamudan Eevaayae, - Ivar Sandhatham Vaazha Neeyae. - Thaevaa 3.ingku Vasikkum Mattum Thunggan Mozhik Kisainthae, - Paran Ishtappati Natanthae, Anggam, Manathu Yaavum Panggaminrith Thodarnthae, - Ivar Anuthinamum Makizhnthae, - Uyar Ambara Veettil Saernthu, - Miku Kempeeramaaga Vaazhnthu, Punggamudan Nidhamum Thangki Yaesu Paranil Ingkidhamaayk Kontaada, - Nidham Manggalak Kavi Paada. - Thaevaa