பாடல் #2777
தேவ வசனத்தையே
🔤 Thaeva Vasanatthaiyae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ வசனத்தையே நீராவலுடன் கேட்டதனின் செய்கைக் காரருமாகுங்களேன் செவ்வையாகவே. - தேவ 1.செய்கையற்ற கேள்விக்காரன் மெய்யாய்த் தன்னிலைமறந்தான், ஐயோ அவன் நிர்ப்பாக்கியனே, அருளில்லானே. - தேவ 2.பூரண விடுதலையின் ஆரணந்தன்னில் நிலைத்துத் தாரணியில் நற்செய்கையுளோன் தகுபாக்கியனே. - தேவ 3.தேவமகிமை நவிலும் நாவையடக்காமலே தான் தீங்குற இதயம் எத்துவோன், தெய்வபத்தி யவம். - தேவ 4.அநாதர் விதவைகளை ஆதரித்துல காற்கறை அணுகாது காப்பதே பத்தி அம்பர தந்தை முன். - தேவ 5.கிருபை விண்ணப்பங்களின் திரு ஆவியை யூற்றுவன் பிதாவை யாவியுண்மையிலும் சதா பணிவீர். - தேவ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Vasanatthaiyae Neeraavaludan Kaettathanin Seykaik Kaararumaakunggalaen Sevvaiyaagavae. - Thaeva 1.seykaiyartra Kaelvikkaaran Meyyaayth Thannilaimaranthaan, Aiyo Avan Nirppaakkiyanae, Arulillaanae. - Thaeva 2.poorana Vitudhalaiyin Aaranandhannil Nilaitthuth Thaaraniyil Narseykaiyulon Thakupaakkiyanae. - Thaeva 3.thaevamakimai Navilum Naavaiyatakkaamalae Thaan Theengkura Idhayam Etthuvon, Theyvapatthi Yavam. - Thaeva 4.anaadhar Vidhavaigalai Aadharitthula Kaarkarai Anukaathu Kaappathae Patthi Ambara Thanthai Mun. - Thaeva 5.kirupai Vinnappanggalin Thiru Aaviyai Yoorruvan Pithaavai Yaaviyunmaiyilum Sathaa Paniveer. - Thaeva