பாடல் #2769
தேவன் மண்ணில் வந்தார்
🔤 Devan Mannil Vanthaar
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆ...ஆ...ஆ...ஆ தேவன் மண்ணில் வந்தார் - அன்பு தேவன் மண்ணில் வந்தார் மனிதன் இறையில் சேர இறை மண்ணில் மனிதன் ஆனார் - 2 மனிதன் தவறிய போது இறைவன் மீட்பை தெரிவித்தார்; மீண்டும் மீட்பின் செய்தியை வரலாற்றினிலே பலமுறை தெரிவித்தார் காலம் நிறைவுற்றப்போது - கடவுள் மகனை அனுப்பி வைத்தார் ஞாலம் மீண்டும் இறையில் சேர இயேசு பாலமாக வந்தார் - 2 இருளின் அடிமை நிலையில் இருந்து விடுதலை தர வந்தார் இயேசு அருளின் வாழ்வை அவனியிலேதான் கொடையாய் தரவந்தார் தந்தை தனது அன்பை இன்று மகனில் முழுமையாக தந்தார் மகனும் தனது அன்பை காட்ட மண்ணின் மனிதனாக பிறந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aa...aa...aa...aa Devan Mannil Vanthaar - Anpu Devan Mannil Vanthaar Manidhan Iraiyil Saera Irai Mannil Manidhan Aanaar - 2 Manidhan Thavariya Pothu Iraivan Meetpai Therivitthaar; Meentum Meetpin Seythiyai Varalaarrinilae Palamurai Therivitthaar Kaalam Niraivurtrappothu - Katavul Makanai Anuppi Vaitthaar Njaalam Meentum Iraiyil Saera Yesu Paalamaaga Vanthaar - 2 Irulin Atimai Nilaiyil Irunthu Vitudhalai Thara Vanthaar Yesu Arulin Vaazhvai Avaniyilaethaan Kotaiyaay Tharavanthaar Thanthai Thanathu Anpai Inru Makanil Muzhumaiyaaga Thanthaar Makanum Thanathu Anpai Kaatta Mannin Manidhanaaga Piranthaar