பாடல் #2761
தேவன் ஆவியாய் இருக்கின்றார்
🔤 Devan Aaviyaay Irukkinraar
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவன் ஆவியாய் இருக்கின்றார் ஆவியோடும் உண்மையோடும் அவரை ஆராதிப்பேன்-2 ஆமென்! சத்தியம் உண்மையுமாய் ஆதியும் அந்தமானார் அவரை ஸ்தோத்தரிப்பேன் உண்மை தேவனே உன்னதர் நீரே உத்தம மனதோடு பின் செல்வேனே பாவ உலகில் பரிசுத்தனாக்கி ஜீவ கிரீடம் தேவா தருவீரே இரட்சியும் கர்த்தாவே மனுமைந்தர்களில் உண்மையுள்ளவர் குறைந்திருக்கிறார் இருதயத்தையும் அங்கங்கள் அனைத்தையும் இரத்தத்தாலும் ஆவியாலும் சுத்திகரியும் உண்மை உத்தமம் கொண்ட நல் ஊழியன் என்ற சாட்சி நான் பெற்றுக்கொள்ளவே வார்த்தையினாலும் வாழ்க்கையினாலும் வாழ்வேன் சாட்சியாய் அனுதினமே என்னை பெலப்படுத்தும் இயேசுகிறிஸ்து உண்மையுள்ளவன் என்று எண்ணியே இந்த ஊழியத்தில் ஏற்றுக் கொண்டதால் இன்றும் என்றும் அவரை ஸ்தோத்தரிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devan Aaviyaay Irukkinraar Aaviyotum Unmaiyotum Avarai Aaraathippaen-2 Aamen! Satthiyam Unmaiyumaay Aathiyum Andhamaanaar Avarai Sthottharippaen Unmai Devanae Unnathar Neerae Utthama Manathotu Pin Selvaenae Paava Ulakil Parisutthanaakki Jeeva Kireedam Thaevaa Tharuveerae Iratsiyum Kartthaavae Manumaindharkalil Unmaiyullavar Kurainthirukkiraar Irudhayatthaiyum Angganggal Anaitthaiyum Ratthatthaalum Aaviyaalum Sutthigariyum Unmai Utthamam Konda Nal Oozhiyan Endra Saatsi Naan Perrukkollavae Vaartthaiyinaalum Vaazhkkaiyinaalum Vaazhvaen Saatsiyaay Anuthinamae Ennai Pelappatutthum Yesukiristhu Unmaiyullavan Enru Enniyae Indha Oozhiyatthil Aerruk Kondathaal Inrum Enrum Avarai Sthottharippaen