பாடல் #2752
தேவனே யேசு நாதனே
🔤 Devanae Yaesu Naadhanae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே, யேசு நாதனே, இத் தேவ ஆலயம் வந்திடும்; தேவ ஆலயம் வந்தவர்க் கருள் திவ்ய ஆவியை ஈந்திடும். 1.பாவிகள் உமக்காலயஞ் செய்யப் பாத்திரர்களோ? அல்லவே; பாவநாசராம் யேசுவே உம்மால் பாத்திரராய் இதைச் செய்தனர் 2.கூடிவந் தும்மையே பணிந்திடக் குறித்த இச்சிறு ஆலயம் நாடி வந்தவர் யாவருக்குமுன், நல்வசன முளதாகவும் 3.தேவனே, உமக்கான ஆலயம் பாவியின் சிறு நெஞ்சமே; பாவம யாவையும் நீக்கியே சிறு தேவ ஆலய மாக்கிடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae, Yaesu Naadhanae, Ith Thaeva Aalayam Vanthitum; Thaeva Aalayam Vandhavark Karul Thivya Aaviyai Eenthitum. 1.paavigal Umakkaalayanj Seyyap Paatthirarkalo? Allavae; Paavanaasaraam Yaesuvae Ummaal Paatthiraraay Ithaich Seythanar 2.kootivan Thummaiyae Paninthidak Kurittha Ichsiru Aalayam Naati Vandhavar Yaavarukkumun, Nalvasana Mulathaagavum 3.devanae, Umakkaana Aalayam Paaviyin Siru Nenjjamae; Paavama Yaavaiyum Neekkiyae Siru Thaeva Aalaya Maakkitum