பாடல் #2726
தேவ லோகமதில்
🔤 Thaeva Logamathil
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ லோகமதில் சேவிப்பார் தூயவர்கள். மாவலராகிய தேவன்றன் பலத்தால் - பூவினில் ஜீவித்துப் புகழுறும் ஜெயம் பெற்றார். - தேவ 1.வானமண்டலப் பொல்லா ஆவியின் சேனையோடும் - பல மான துரைத்தனம், அதிகாரம், பிரபஞ்ச அதிபதியிவர்களோடும் ஞானமாய்த் தேவ சர்வாயுதம் தரித்து, - நலமுடன் போராடி உலகினில் ஜெயங் கொண்டார். - தேவ 2.பட்டயம், நிர்வாணம், பசி, நாச மோசங்களும் - மா பாடு, வியாகுலத்தோடு, உபத்ரவம், பஞ்சமும் மிஞ்சி வந்தும், துட்டர்கள் கிட்டினும் மட்டில்லா அன்பரால் - துணிவுடன் முற்றிலும் ஜெயித்த விசுவாசிகள். - தேவ 3.பாரத்தையும், தமை நெருங்கிய பாவத்தையும் - தள்ளிப் பட்சமுறும் யேசுரட்சகர்மீது தம் பார்வையை வைத்து என்றும் வீரமாய் ஓடியே வெற்றி சிறந்தவர், - வேகும் அக்கினியின் உக்கிரம் அறிவித்தவர். - தேவ 4.ஜெயங் கொள்வோர் பரதீசினில் வீற்றிருப்பார், - வாடா ஜீவகிரீடம் அணிந்தாளுகை செய்வார், ஜீவகனி புசிப்பார், வியப்புறு புது நாமம், வெள்ளுடை பெற்றுமே - விடிவெள்ளியாய் அவர் விளங்கி ஜொலித்திடுவார் - தேவ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Logamathil Saevippaar Thooyavarkal. Maavalaraakiya Devandran Palatthaal - Poovinil Jeevitthup Pugazhurum Jeyam Perraar. - Thaeva 1.vaanamandalap Pollaa Aaviyin Saenaiyotum - Pala Maana Thuraitthanam, Athikaaram, Pirapanjja Athibathiyivarkalotum Njaanamaayth Thaeva Sarvaayudham Tharitthu, - Nalamudan Poraati Ulakinil Jeyang Kontaar. - Thaeva 2.pattayam, Nirvaanam, Pasi, Naasa Mosanggalum - Maa Paatu, Viyaakulatthotu, Ubathravam, Panjjamum Minjsi Vanthum, Thuttarkal Kittinum Mattillaa Anbaraal - Thunivudan Murrilum Jeyittha Visuvaasigal. - Thaeva 3.paaratthaiyum, Thamai Nerungkiya Paavatthaiyum - Thallip Patsamurum Yaesuratsakarmeethu Tham Paarvaiyai Vaitthu Enrum Veeramaay Otiyae Verri Sirandhavar, - Vaekum Akkiniyin Ukkiram Arivitthavar. - Thaeva 4.jeyang Kolvor Paratheesinil Veerriruppaar, - Vaataa Jeevakireedam Aninthaalukai Seyvaar, Jeevakani Pusippaar, Viyappuru Puthu Naamam, Vellutai Perrumae - Vitivelliyaay Avar Vilangki Jolitthituvaar - Thaeva