பாடல் #2721
தேவ பிதா எந்தன்
🔤 Thaeva Pithaa Endhan
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ பிதா எந்தன் (என்றன்) மேய்ப்பன் அல்லோ சிறுமை தாழ்ச்சி அடைகிலனே ஆவலதாய் எனைப் பைம்புன்மேல் அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார் 1. ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி அடியேன் கால்களை நீதி என்னும் நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம் நிதமும் சுகமாய் நடத்துகின்றார் 2. சா நிழல்பள்ளத் திறங்கிடினும், சற்றும் தீங்கு கண்டஞ்சேனே வானபரன் என் னோடிருப்பார் வளை தடியும் கோலுமே தேற்றும் 3. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி பாங்காய் எனக்கென் றேற்படுத்திச் சுக தயிலம் கொண்டென் தலையைச் சுபமாய் அபிஷேகம் செய்குவார் 4. ஆயுள் முழுவதும் என் பாத்ரம் அருளும் நலமுமாய் நிரம்பும், நேயன் வீட்டினில் சிறப்போடே நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Pithaa Endhan (endran) Maeyppan Allo Sirumai Thaazhchsi Ataikilanae Aavalathaay Enaip Paimpunmael Avar Maeyth Thamar Neer Arulukinraar 1. Aatthuman Thannaik Kulirappanni Atiyaen Kaalkalai Neethi Ennum Naertthiyaam Paathaiyil Avar Nimittham Nidhamum Sugamaay Natatthukinraar 2. Saa Nizhalpallath Thirangkitinum, Sarrum Theengku Kandanjsaenae Vaanaparan En Notiruppaar Valai Thatiyum Kolumae Thaerrum 3. Pakaivark Kethirae Oru Panthi Paangkaay Enakken Raerpatutthich Suga Thayilam Konten Thalaiyaich Subamaay Apishaegam Seykuvaar 4. Aayul Muzhuvathum En Paathram Arulum Nalamumaay Nirampum, Naeyan Veettinil Sirappotae Netunaal Kutiyaay Nilaitthiruppaen