பாடல் #2711
தேவ சுதன் பூவுலகோர்
🔤 Thaeva Sudhan Poovulakor
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க - மனு ஜென்மமாக வன்மையுள்ளோன் தன்மையாய் வந்தார். 2.வந்த பின் தன் தந்தையர்க் குகந்தபடியே - பர மண்டலன் பூ மண்டலத்தோர் தொண்டன்போல் ஆனார். 3.தொண்டனாகி, அண்டர் கோமான் விண்ட மறையே, - பரி சுத்தம், மகா சத்யம், மிகு புத்திக்கும் ஊற்றே. 4.புத்தி மிகு வித்தமறை யைத் துலக்கவே - பல போதகன்மார் பூதலத்தின் மீதில் தெரிந்தார். 5.பூதலத்தில் வேதமறை ஓதி, நரர்க்குள் - அற் புதங்கள் செய்துசிதங்கள் ஓதிக் கதங்களை வென்றார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.thaeva Sudhan Poovulakor Paavam Ozhikka - Manu Jenmamaaga Vanmaiyullon Thanmaiyaay Vanthaar. 2.vandha Pin Than Thanthaiyark Kugandhapatiyae - Para Mandalan Poo Mandalatthor Thondanpol Aanaar. 3.thondanaaki, Andar Komaan Vinda Maraiyae, - Pari Suttham, Makaa Sathyam, Miku Putthikkum Oorrae. 4.putthi Miku Vitthamarai Yaith Thulakkavae - Pala Podhakanmaar Poodhalatthin Meethil Therinthaar. 5.poodhalatthil Vaedhamarai Othi, Nararkkul - Ar Pudhanggal Seythusidhanggal Othik Kathanggalai Venraar.