பாடல் #2702
தேவ கிருபை ஆசீர்வாதம்
🔤 Thaeva Kirupai Aaseervaadham
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ கிருபை ஆசீர்வாதம் தினமும் எங்களில் பெருகிட ஆவலாயும் தோய்வு நாளில் ஆலயந்தனில் பணிந்து புகழ பாவ அறிக்கை செய்யும் ஜனங்கள் பரனின் கிருபை பெற்று மகிழ - தேவ ஆவலாய் எங்கள் ஆண் குழந்தைகள் அழகான இள மரங்கள் போலவும் பாவையர்களாம் பெண் குழந்தைகள் பலத்த சித்திர அரண்கள் போலவும் - தேவ எங்கள் பண்டக சாலை சகல இன்ப வஸ்துக்கள் நிறைந்திருக்கவும் பங்க வலசை பகலின் கூக்குரல் பதியில் என்று மில்லாதிருக்கவும் - தேவ ஆலயந்தனில் உமது வசனம் அறிவிக்கும் போதகரனைவருக்குள்ளும் வேலை ஓய்ந்து பணியும் சபையார் விரும்பிப் படிக்கும் சகலருக்குள்ளும் - தேவ இத்தன்மையுடன் இருக்கும் ஜனங்கள் இவர்கள் தாமென உலகம் சொல்லவும் கர்த்தர் தெய்வமென்றிருக்கும் பாக்கியம் கண்ட ஜனமென்றெம்மைச் சொல்லவும் - தேவ உன்னதங்களில் இருக்கும் தெய்வத்தின் உயர்ந்த நாமம் மகிமைப்படவும் இந்நிலம் சமாதானம் பெற்றிட இஷ்டம் மானிடர் மேலுண்டாகவும் - தேவ இந்த வீட்டுக்குச் சமாதானம் இன்ப சுகங்கள் அனைத்துண்டாகவும் சந்ததியாய் நீடூழி வாழவும் சபையனைவரும் துதித்துப் பாடவும் - தேவ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Kirupai Aaseervaadham Thinamum Enggalil Perukida Aavalaayum Thoyvu Naalil Aalayandhanil Paninthu Pugazha Paava Arikkai Seyyum Jananggal Paranin Kirupai Perru Makizha - Thaeva Aavalaay Enggal Aan Kuzhanthaigal Azhakaana Ila Maranggal Polavum Paavaiyarkalaam Pen Kuzhanthaigal Palattha Sitthira Arankal Polavum - Thaeva Enggal Pandaka Saalai Sakala Inba Vasthukkal Nirainthirukkavum Pangga Valasai Pakalin Kookkural Pathiyil Enru Millaathirukkavum - Thaeva Aalayandhanil Umathu Vasanam Arivikkum Podhakaranaivarukkullum Vaelai Oynthu Paniyum Sapaiyaar Virumpip Patikkum Sakalarukkullum - Thaeva Itthanmaiyudan Irukkum Jananggal Ivarkal Thaamena Ulakam Sollavum Kartthar Theyvamenrirukkum Paakkiyam Kanda Janamenremmaich Sollavum - Thaeva Unnathanggalil Irukkum Theyvatthin Uyarndha Naamam Makimaippatavum Innilam Samaathaanam Perrida Ishtam Maanidar Maeluntaagavum - Thaeva Indha Veettukkuch Samaathaanam Inba Suganggal Anaitthuntaagavum Sandhathiyaay Neetoozhi Vaazhavum Sapaiyanaivarum Thuthitthup Paadavum - Thaeva