பாடல் #27
அஞ்சாதே இயேச
🔤 Anjsaathae Yesa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அஞ்சாதே, இயேசு ரட்சகர் ஆத்துமத்துயர் நீக்க வல்லவர். வஞ்சமே மிஞ்சுமா பஞ்சபாதகன் நானென்று - அஞ் 1.வெள்ளிக் காசொன்றை இழந்து விட்டவள் வீட்டைப் பெருக்கிப் பார்த் தெடுத்தபின், துள்ளிப் பூரிக்கும் போல் உன்மேலே, தூதர் சங்கமும் களிப்பதாலே. - அஞ் 2.மேய்ப்பன் மந்தையை விலகின ஆட்டை வெகு கவலையாய்த் தேடிக் கண்டபின், வாய்ப்புடன் மனம் மகிழும் போலே, மானுவேலுனைத் தழுவலாலே. - அஞ் 3.தொண்ணூற் றொன்பது நீதியரிலுந் துயரடை பாவி யொருவன் மீதினில் எண்ணருந் தூதர் மகிழ்வதாலே இரட்சிப் புனக்குப் பலித்ததாலே. - அஞ் 4.திருடன் ஒருவன் மரிக்கும் வேளையில் திருச்சுதன் பதம் தழுவிக் கதிக்-கு அருள் பெற்றான், என வேதஞ் சொல்வதை ஆய்ந்து மனஞ் சாய்ந்து நீ செல். - அஞ் 5.மரணத்தின் கூரை ஒடித்த வல்லவன் வருந்தி அழைத்த விருந்துக்கு வரத் தருணம் ஈதெனத் தாசர்கூடிச் சாற்றும் மொழியை எற்று நீவர. - அஞ்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anjsaathae, Yesu Ratsakar Aatthumatthuyar Neekka Vallavar. Vanjjamae Minjsumaa Panjjapaadhakan Naanenru - Anj 1.vellik Kaasonrai Izhanthu Vittaval Veettaip Perukkip Paarth Thetutthapin, Thullip Poorikkum Pol Unmaelae, Thoodhar Sanggamum Kalippathaalae. - Anj 2.maeyppan Manthaiyai Vilakina Aattai Veku Kavalaiyaayth Thaetik Kandapin, Vaayppudan Manam Makizhum Polae, Maanuvaelunaith Thazhuvalaalae. - Anj 3.thonnoor Ronbathu Neethiyarilun Thuyaratai Paavi Yoruvan Meethinil Ennarun Thoodhar Makizhvathaalae Iratsip Punakkup Palitthathaalae. - Anj 4.thirudan Oruvan Marikkum Vaelaiyil Thiruchsudhan Patham Thazhuvik Kathik-ku Arul Perraan, Ena Vaedhanj Solvathai Aaynthu Mananj Saaynthu Nee Sel. - Anj 5.maranatthin Koorai Otittha Vallavan Varunthi Azhaittha Virunthukku Varath Tharunam Eethenath Thaasarkootich Saarrum Mozhiyai Erru Neevara. - Anj