பாடல் #2698
தேவ ஆட்டுக் குட்டியே லோகத்தாரின் மீட்பரே
🔤 Thaeva Aattuk Kuttiyae Logatthaarin Meetparae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. தேவ ஆட்டுக் குட்டியே லோகத்தாரின் மீட்பரே உம்மால் மீட்கப்பட்ட நான் தேவரீர்க்குச் சொந்தம்தான் நீர் என் கோட்டை தஞ்சமாம் யார் என் வாழ்வை நீக்கலாம்? 2. உம்மைப் பற்றும் நேசத்தை உம்மில் வைக்கும் பக்தியை பேயும் கெட்ட லோகமும் மூர்க்கமாய் விரோதிக்கும் இன்பம் துன்பம் நித்தமே கண்ணியாக நிற்குமே. 3. கர்த்தரே என் உள்ளத்தில் ஒளி வீசி மனதில் அந்தகாரம் நீக்கிடும் அன்பின் ஜுவாலை ஏற்றிடும் தூய ஆவி ரூடவ்வையும் பூர்த்தியாக அளியும். 4. எந்த நாழிகையிலே நீர் வந்தாலும் யேசுவே உம்மை நானும் சந்தித்து கண்ணால் கண்டு களித்து வாழ்வதற்குத் தினமும் சாவதானம் ரூடவ்ந்திடும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thaeva Aattuk Kuttiyae Logatthaarin Meetparae Ummaal Meetkappatta Naan Thaevareerkkuch Sondhamthaan Neer En Kottai Thanjjamaam Yaar En Vaazhvai Neekkalaam? 2. Ummaip Parrum Naesatthai Ummil Vaikkum Pakthiyai Paeyum Ketta Logamum Moorkkamaay Virothikkum Inbam Thunbam Nitthamae Kanniyaaga Nirkumae. 3. Karttharae En Ullatthil Oli Veesi Manathil Andhakaaram Neekkitum Anpin Juvaalai Aerritum Thooya Aavi Roodavvaiyum Poortthiyaaga Aliyum. 4. Endha Naazhikaiyilae Neer Vanthaalum Yaesuvae Ummai Naanum Santhitthu Kannaal Kantu Kalitthu Vaazhvatharkuth Thinamum Saavathaanam Roodavnthitum.