பாடல் #2688
தேன் இனிமை யதிலும்
🔤 Thaen Inimai Yathilum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேன் இனிமை யதிலும் சத்திய வேதம் திவ்யமான மதுரம். ஞானமது நிறையும் வேதமதில் எனக்கு, நாதனே, அருள் ஆசை அனுதினம் ருசித்திட, - தேன் 1.ஆரணம் அதி புனிதம் களங்கம் இல் லாத சுகிர்த அமுதம்; பூரணமாய் அதைத்தான் உட் கொண்டே வரில், பொன்னுல கதற் கேற்ற தன்மை உண்டாக்குமே. - தேன் 2.பாதைக்குரிய தீபம்; மெய் வேதம் பற்றிடில் மிகு லாபம்; வாதை செய்திடும் பல சோதனைகளும் எதிர் வரில் அனைத்தும் வெல்லத்தகும் படைக்கல மதே. - தேன் 3.விண்ண தழிந்தாலும், அதோ டிந்த மேதினி ஒழிந்தாலும், திண்ண மதாய் என்றும் சிறந்திலகும் ஜீவ திருமறை எனில் தங்கிப் பலன் தர அனுக்ரகி. - தேன் 4.எத்திசையிலுமுள்ள நரர் யாரும் ஏகன் நின் அறிவு கொள்ள, சுத்த சுவிசேஷம் துலங்கிப்ர காசிக்கத் தூய நல் ஆவியை யாவர்க்கும் ஈந்தருள். - தேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaen Inimai Yathilum Satthiya Vaedham Thivyamaana Mathuram. Njaanamathu Niraiyum Vaedhamathil Enakku, Naadhanae, Arul Aasai Anuthinam Rusitthida, - Thaen 1.aaranam Athi Punidham Kalanggam Il Laadha Sukirtha Amudham; Pooranamaay Athaitthaan Ut Kontae Varil, Ponnula Kathar Kaertra Thanmai Untaakkumae. - Thaen 2.paathaikkuriya Theebam; Mey Vaedham Parritil Miku Laabam; Vaathai Seythitum Pala Sodhanaigalum Ethir Varil Anaitthum Vellatthakum Pataikkala Mathae. - Thaen 3.vinna Thazhinthaalum, Atho Tindha Maethini Ozhinthaalum, Thinna Mathaay Enrum Siranthilakum Jeeva Thirumarai Enil Thangkip Palan Thara Anukraki. - Thaen 4.etthisaiyilumulla Narar Yaarum Aegan Nin Arivu Kolla, Suttha Suvisaesham Thulangkipra Kaasikkath Thooya Nal Aaviyai Yaavarkkum Eendharul. - Thaen