பாடல் #2687
தேனிலும் மதுரம் வேதம் அல்லாமல்
🔤 Thaenilum Mathuram Vaedham Allaamal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. தேனிலும் மதுரம் வேதம் அல்லாமல் ஏதுண்டு? சொல் கண்ணே - மிகச் சிற்றின்பம் அதனை நற்றாசை வைத்து தேடுவாயோ கண்ணே. 2. காலையில் பனிபோல் சாலொமோன் மகிமை கரைந்தது பார் கண்ணே - நேச கர்த்தரின் வசனம் எத்தனை இன்பம் காண்பாய் என் கண்ணே. 3. தோழி சங்கீத இனிமை நற்பாகின் சுவையும் இணையோ கண்ணே? - அருள் சுருதியின் வசனம் இருதயம் மகிழச் செய்திடும் என் கண்ணே. 4. நாற்பது நாளாய்த் தீப்பசிக்காளாய் நலிந்திட்ட போது யேசு - வெகு தாற்பரியத் தோடேய்த்த பசாசை ஜெயித்தார் இதனாலே. 5. தேனிலும் தேன் கூண் டொழுகல்கள் தனிலும் திவ்விய மதுரமாமே; - அது ஜீவனுக் கமிர்தம் ஆவிக்குச் சுகிர்தம் தினம் ருசித்திடு கண்ணே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thaenilum Mathuram Vaedham Allaamal Aethuntu? Sol Kannae - Migach Sirrinbam Adhanai Narraasai Vaitthu Thaetuvaayo Kannae. 2. Kaalaiyil Panipol Saalomon Makimai Karaindhathu Paar Kannae - Naesa Karttharin Vasanam Etthanai Inbam Kaanpaay En Kannae. 3. Thozhi Sangkeedha Inimai Narpaakin Suvaiyum Inaiyo Kannae? - Arul Suruthiyin Vasanam Irudhayam Makizhach Seythitum En Kannae. 4. Naarpathu Naalaayth Theeppasikkaalaay Nalinthitta Pothu Yaesu - Veku Thaarpariyath Thotaeyttha Pasaasai Jeyitthaar Idhanaalae. 5. Thaenilum Thaen Koon Tozhugalkal Thanilum Thivviya Mathuramaamae; - Athu Jeevanuk Kamirtham Aavikkuch Sukirtham Thinam Rusitthitu Kannae.