பாடல் #2686
தேனிலும் இனிய நேசரே சற்றுச்
🎙 கிறிஸ்தவ பாடல்
தேனிலும் இனிய நேசரே சற்றுச் செவி கொடு;த்தெனைக் கேளும்! - மது பானமாம் விஷத்தைப் பானஞ் செய்யாதீர் பாம்பாம் அது நாளும். 1. எத்தனை பேர்கள் குடியினால் மடிந்தார்! இதயம் நடுங்கிடுதே! பெரும் பித்தரைப் போலச் சாராயம் அருந்த பேதைகள் ஏகிடுதே 2. பெண்களை இழந்து பிள்ளைகள் அலைந்து பிச்சை கேட்கவுமாச்சே! இரத்தக் கண்களும் முகத்தில் புண்களும் விளங்கக் காரணமது வாச்சே!