பாடல் #2668
தெய்வீகக் கூடாரமே
🔤 Theyveegak Kootaaramae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Maj
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 156 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தெய்வீகக் கூடாரமே - என் தேவனின் சந்நிதியே தேடி ஓடி வந்தோம் தெவிட்டாத பாக்கியமே மகிமை மகிமை மாட்சிமை மாறா என் நேசருக்கே கல்வாரி திருப்பீடமே கறை போக்கும் திரு இரத்தமே உயிருள்ள பரிசுத்த ஜீவப் பலியாக ஒப்புக் கொடுத்தோம் ஐயா ஈசோப்புல்லால் கழுவும் இன்றே சுத்தமாவோம் உறைகின்ற பனி போல வெண்மையாவோம் ஐயா உம்திரு வார்த்தையினால் அப்பா உன் சமூகத்தின் அப்பங்கள் நாங்கள் ஐயா எப்போதும் உம் திருப்பாதம் அமாந்திட ஏங்கித் தவிக்கின்றோம் உலகத்தின் வெளிச்சம் நாங்கள் உமக்காய் சுடர் விடுவோம் ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா அனல் மூட்டி எரியவிடும் தூபமாய் நறுமணமாய் துதிகளை செலுத்துகிறோம் எந்தாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும் ஆவியில் ஜெபிக்கின்றோம் ஜீவனுள்ள புதிய மார்க்கம் தந்தீர் ஐயா மகா பரிசுத்த கூடரத்திற்குள்ளே மகிமையில் நுழைந்து விட்டோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Theyveegak Kootaaramae - En Devanin Sannithiyae Thaeti Oti Vanthom Thevittaadha Paakkiyamae Makimai Makimai Maatsimai Maaraa En Naesarukkae Kalvaari Thiruppeedamae Karai Pokkum Thiru Ratthamae Uyirulla Parisuttha Jeevap Paliyaaga Oppuk Kotutthom Aiyaa Eesoppullaal Kazhuvum Inrae Sutthamaavom Uraikindra Pani Pola Venmaiyaavom Aiyaa Umthiru Vaartthaiyinaal Appaa Un Samoogatthin Appanggal Naanggal Aiyaa Eppothum Um Thiruppaadham Amaanthida Aengkith Thavikkinrom Ulakatthin Veliccham Naanggal Umakkaay Sudar Vituvom Aanandha Thailatthaal Apishaekiyum Aiyaa Anal Mootti Eriyavitum Thoobamaay Narumanamaay Thuthigalai Selutthukirom Enthaalum Eppothum Ellaa Jebatthotum Aaviyil Jepikkinrom Jeevanulla Puthiya Maarkkam Thantheer Aiyaa Makaa Parisuttha Koodaratthirkullae Makimaiyil Nuzhainthu Vittom