பாடல் #26656
எந்தனை மீட்க இயேசுவே
🔤 Endhanai Meetka Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தனை மீட்க இயேசுவே ஈந்தீர் உந்தனின் சொந்த ஜீவனையே சிந்தனை செய்வேன் சிலுவையால் வந்த வந்த மேன்மை எந்தன் பாக்கியமே - 2 காவினில் வேர்வை இரத்தமாய் ஓட கஸ்தியடைந்திடக் காரணமேன்? - 2 பாவியாம் எந்தன் பாவத்தின் கோர காட்சி கண்ட கலக்கமோ தான் - 2 கையைக் கட்டி கள்ளனைப் போலவே பிலாத்து முன் நின்று காரணம்? - 2 வையகந்தனில் நான் இரும்பினால் செய்த வலிய கொடுமை போக்கிடவோ - 2 முள்முடி சூட்டி மூர்க்கரடித்து முகத்தினில் உமிழ்ந்திடக் காரணமேன் ? - 2 கள்ளனாம் எனையே கர்த்தரில் இணைக்கும் - 2 கருணை தேவனின் அன்புதானோ - 2 பாதகர் பலபல பரிகாசம் சொல்ல - 2 பதில் உரையாத காரணமேன் - 2 பாதகன் எந்தன் நாவினால் மொழிந்த தீய மொழிகளின் தீவினையோ - 2 ஈட்டியால் குத்தி இரத்தமும் பாய்ந்திட ராஜாதி ராஜனே காரணமேன்? - 2 மீட்டிடக் கொடுத்தேன் இரத்தமே யென்று காட்டியே கல்நெஞ்சம் உடைத்திடவோ வாதைகள் மிஞ்சி தாகமுமாகி வாடி வதங்கிடக் காரணமேன்? - 2 பேதையாம் என்னுள்ளம் பிசாசினா லடைந்த பெரிய காயத்தின் வேதனையோ - 2 கோரமாய் இயேசுவே கொல்கொதா மலையில் குருசினில் தொங்கிடக் காரணமேன் ? - 2 பாரமாம் எந்தன் பாவம் சுமக்க பரமன் விதித்த பலி நீரோ - 2 இத்தனை பாடும் ஈனர்கள் கேடும் இயேசுவே சகித்துக் காரணமேன் - 2 நித்திய மகிமைக்காய் நியமிக்க என்னை அத்தனே அளித்தீர் ஆருயிரை - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhanai Meetka Yesuvae Eentheer Undhanin Sondha Jeevanaiyae Sindhanai Seyvaen Siluvaiyaal Vandha Vandha Maenmai Endhan Paakkiyamae - 2 Kaavinil Vaervai Ratthamaay Oda Kasthiyatainthidak Kaaranamaen? - 2 Paaviyaam Endhan Paavatthin Kora Kaatsi Kanda Kalakkamo Thaan - 2 Kaiyaik Katti Kallanaip Polavae Pilaatthu Mun Ninru Kaaranam? - 2 Vaiyakandhanil Naan Irumpinaal Seytha Valiya Kotumai Pokkidavo - 2 Mulmuti Sootti Moorkkaratitthu Mugatthinil Umizhnthidak Kaaranamaen ? - 2 Kallanaam Enaiyae Karttharil Inaikkum - 2 Karunai Devanin Anputhaano - 2 Paadhakar Palapala Parikaasam Solla - 2 Pathil Uraiyaadha Kaaranamaen - 2 Paadhakan Endhan Naavinaal Mozhindha Theeya Mozhigalin Theevinaiyo - 2 Eettiyaal Kutthi Ratthamum Paaynthida Raajaathi Raajanae Kaaranamaen? - 2 Meettidak Kotutthaen Ratthamae Yenru Kaattiyae Kalnenjjam Utaitthidavo Vaathaigal Minjsi Thaagamumaaki Vaati Vathangkidak Kaaranamaen? - 2 Paethaiyaam Ennullam Pisaasinaa Lataindha Periya Kaayatthin Vaedhanaiyo - 2 Koramaay Yesuvae Kolkothaa Malaiyil Kurusinil Thongkidak Kaaranamaen ? - 2 Paaramaam Endhan Paavam Sumakka Paraman Vithittha Pali Neero - 2 Itthanai Paatum Eenarkal Kaetum Yesuvae Sakitthuk Kaaranamaen - 2 Nitthiya Makimaikkaay Niyamikka Ennai Atthanae Alittheer Aaruyirai - 2