பாடல் #26619
மனமே நீ வாராய்
🔤 Manamae Nee Vaaraay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனமே நீ வாராய் கொல்கொதா சேராய் தேவ சுதன் அன்பின் ஆழம் நீளம் பாராய் - 2 மன்னா உலகமதில் நீ இதைப்போலொரு நேசம் - 2 கண்டதுண்டோ மனமே - மனமே சேவகர் துய்ய மேனிதான் நொய்ய வாரினால் மிக அடித்தாரிதோ பாராய் - 2 கேவலக் கோலமோடு தாம் வசைகள் பலவேற்று - 2 உன் பாவத்தைச் சுமந்தார் செங்கரமுடனே பங்கயக் கால்கள் ஆணியால் - 2 சிலுவையில் இறுக்கி அறைந்தார் பொங்கியே திரு உதிரம் நீர் ஊறிடும் ஊற்றாக - 2 வழிந்திடும் காட்சியைப் பாராய் பொன்முடி சூடி பொன்னுலகாளும் பூபதி கொண்ட கோலமிதோ பாராய் - 2 முள்முடி சிரமதிலே தான் உறுத்திட செங்குருதி - 2 தம் சென்னியி லோடுதுபார் வீராதி வீரன் விலாவினில் ஈட்டி பாய்ந்திட அந்தோ ஜலமுடன் உதிரம் பாராய் - 2 ஓராய் பாவமதனை இப்போ போக்கும் செஞ்சிலுவை - 2 கல்மனம் உனக்கு ஏனோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manamae Nee Vaaraay Kolkothaa Saeraay Thaeva Sudhan Anpin Aazham Neelam Paaraay - 2 Mannaa Ulakamathil Nee Ithaippoloru Naesam - 2 Kandathunto Manamae - Manamae Saevakar Thuyya Maenithaan Noyya Vaarinaal Miga Atitthaaritho Paaraay - 2 Kaevalak Kolamotu Thaam Vasaigal Palavaerru - 2 Un Paavatthaich Sumanthaar Senggaramudanae Panggayak Kaalkal Aaniyaal - 2 Siluvaiyil Irukki Arainthaar Pongkiyae Thiru Uthiram Neer Ooritum Oorraaga - 2 Vazhinthitum Kaatsiyaip Paaraay Ponmuti Sooti Ponnulakaalum Poobathi Konda Kolamitho Paaraay - 2 Mulmuti Siramathilae Thaan Urutthida Sengkuruthi - 2 Tham Senniyi Lotuthupaar Veeraathi Veeran Vilaavinil Eetti Paaynthida Antho Jalamudan Uthiram Paaraay - 2 Oraay Paavamathanai Ippo Pokkum Senjsiluvai - 2 Kalmanam Unakku Aeno