பாடல் #2661
தெய்வத்துவத்தின் பரிபூரணம்
🔤 Theyvatthuvatthin Paripooranam
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தெய்வத்துவத்தின் பரிபூரணம் எல்லாம் இயேசுவில் இருக்கக்கண்டோம் அவருக்குள் ஞானம், மீட்பு, தூய்மை பொக்கிஷவைப்பாய் கண்டோம் விசுவாசத்தில் மெத்த உறுதிப்படுவோம் இயேசுவின் சாயலை அணிந்திருப்போம் அவரோடும் மரித்துயிர்த்தெழுந்தே மகிமையாய் மலர்ந்திருப்போம் மேலானவைகளை நாடுவோம் மேலோகவாசிகளாய் இருப்போம் - அவரோடு இயேசுவை எந்நாளும் சேவிப்போம் வேதத்தின் முன்னே நடுங்கி நிற்வோம் சொல் செயலாலும் அனதினவாழ்வில் கர்த்தரை ஸ்தோத்தரிப்போம் மேலானவைகளை நாடுவோம் மேலோகவாசிகளாய் இருப்போம் - சொல் செயல் ஞாலமெங்கும் தேவதூது சொல்வோம் ஞானமாய் காலத்தை செலவழிப்போம் ஜெபதூபம் ஸ்தோத்திரத்தோடே ஜெயமாக வாழ்ந்திருப்போம் மேலானவைகளை நாடுவோம் மேலோகவாசிகளாய் இருப்போம் - ஜெப தூபம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Theyvatthuvatthin Paripooranam Ellaam Yesuvil Irukkakkantom Avarukkul Njaanam, Meetpu, Thooymai Pokkishavaippaay Kantom Visuvaasatthil Mettha Uruthippatuvom Yesuvin Saayalai Aninthiruppom Avarotum Maritthuyirtthezhunthae Makimaiyaay Malarnthiruppom Maelaanavaigalai Naatuvom Maelogavaasigalaay Iruppom - Avarotu Yesuvai Ennaalum Saevippom Vaedhatthin Munnae Natungki Nirvom Sol Seyalaalum Anathinavaazhvil Karttharai Sthottharippom Maelaanavaigalai Naatuvom Maelogavaasigalaay Iruppom - Sol Seyal Njaalamengkum Thaevathoothu Solvom Njaanamaay Kaalatthai Selavazhippom Jebathoobam Sthotthiratthotae Jeyamaaga Vaazhnthiruppom Maelaanavaigalai Naatuvom Maelogavaasigalaay Iruppom - Jeba Thoobam