பாடல் #2657
தூய்மையே வலிமை கேளீர்
🔤 Thooymaiyae Valimai Kaeleer
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூய்மையே வலிமை கேளீர்! வாய்மையே உயர்வு காணீர்! இயேசுவில் இரண்டும் பெறுவீர் (2) சந்திரன் பாதையைக் கண்டாய்! சமுத்திர ஆழத்தை வென்றாய்! தூய்மையின் பாதைதான் எங்கே? என்பதில் ஏதும் உலகினில் இல்லை! அழிக்கவும் ஆக்கவும் அணுதான் பலபல புதுமைகள் நலம்தான் யாவையும் கண்ட மனிதா மனத்தூய்மைக்கு மார்க்கம் சொல் எனக்கு! தத்துவம் பேசுவார் உண்டு தர்க்க சாஸ்திரம் புரட்டுவார் உண்டு கல்வி கொடுப்பது அறிவு ஆனால் தேவன் அருளுவது ஞானம்! பரிசுத்த ஆவியின் நிறைவு பரிசுத்தமானதோர் வாழ்வு வெற்றியின் ஜீவியம் கொள்ள இயேசு அழைக்கிறார், இணங்கி நீ செல்ல!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thooymaiyae Valimai Kaeleer! Vaaymaiyae Uyarvu Kaaneer! Yesuvil Irantum Peruveer (2) Santhiran Paathaiyaik Kantaay! Samutthira Aazhatthai Venraay! Thooymaiyin Paathaithaan Engkae? Enbathil Aethum Ulakinil Illai! Azhikkavum Aakkavum Anuthaan Palapala Puthumaigal Nalamthaan Yaavaiyum Kanda Manithaa Manatthooymaikku Maarkkam Sol Enakku! Thatthuvam Paesuvaar Untu Tharkka Saasthiram Purattuvaar Untu Kalvi Kotuppathu Arivu Aanaal Devan Aruluvathu Njaanam! Parisuttha Aaviyin Niraivu Parisutthamaanathor Vaazhvu Verriyin Jeeviyam Kolla Yesu Azhaikkiraar, Inangki Nee Sella!