பாடல் #2572
துங்கனில் ஒதுங்குவோம்
🔤 Thungganil Othungkuvom
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான். கங்குல் பக லும்பரனார் காவல் அரணாதலால் - துங் 1.வேடன் கண்ணி குத்துங்கால், விக்கினங்கள் சுற்றுங்கால், மூடி உனைக் காப்பாரே, ஒர் மோசமின்றிச் சேர்ப்பரே. - துங் 2.பக்கத்திலே ஆயிரம், பாலே பதினாயிரம் சிக்கென வீழ்ந்தாலுமே, தீங்குனை அண்டாதுகாண். - துங் 3.கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய்; அண்ணலே உன் அடைக்கலம், ஆண்டவன் உன் தாபரம். - துங் 4.தீங்குனை அண்டாமலும், தீனங்கள் தீண்டாமலும், பாங்கு தூதர் காபந்தில் பத்திரமாய் வாழ்வையே. - துங் 5.பாதம் கல்லிட றாமல், பகைவர் உக்ரம் மீறாமல், தூதர் உனைக் கைகளில் தூக்கி ஏந்திக்கொள்வரே. - துங் 6.நீடுநாட்களாகவே கேடு துன்பம் போகவே, வீடுபரதீசினில் சூடுவான் மா மகிமைகள். - துங்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thungganil Othungkuvon Panggaminrith Thangkuvaan. Kangkul Paka Lumbaranaar Kaaval Aranaadhalaal - Thung 1.vaedan Kanni Kutthungkaal, Vikkinanggal Surrungkaal, Mooti Unaik Kaappaarae, Or Mosaminrich Saerpparae. - Thung 2.pakkatthilae Aayiram, Paalae Pathinaayiram Sikkena Veezhnthaalumae, Theengkunai Antaathukaan. - Thung 3.kanninaalae Paarkkuvaay, Katavul Seyal Nokkuvaay; Annalae Un Ataikkalam, Aandavan Un Thaabaram. - Thung 4.theengkunai Antaamalum, Theenanggal Theentaamalum, Paangku Thoodhar Kaabanthil Patthiramaay Vaazhvaiyae. - Thung 5.paadham Kallida Raamal, Pakaivar Ukram Meeraamal, Thoodhar Unaik Kaigalil Thookki Aenthikkolvarae. - Thung 6.neetunaatkalaagavae Kaetu Thunbam Pogavae, Veetubaratheesinil Sootuvaan Maa Makimaigal. - Thung