பாடல் #2571
துக்கம் கொண்டாட வாருமே
🔤 Thukkam Kontaada Vaarumae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. துக்கம் கொண்டாட வாருமே, பாரும்! நம் மீட்பர் மரித்தார் திகில் கலக்கம் கொள்ளுவோம் இயேசு சிலுவையில் மாண்டார். 2. போர் வீரர், யூதர் நிந்தித்தும், மா பொறுமையாய்ச் சகித்தார் நாமோ புலம்பி அழுவோம்; இயேசு சிலுவையில் மாண்டார். 3. கை காலை ஆணி பீறிற்றே, தவனத்தால் நா வறண்டார்; கண் ரத்தத்தாலே மங்கிற்றே; இயேசு சிலுவையில் மாண்டார். 4. மும்மணி நேரம் மாந்தர்க்காய், தம் மெளனத்தாலே கெஞ்சினார்; நல் வாக்கியம் ஏழும் மொழிந்தே இயேசு சிலுவையில் மாண்டார். 5. சிலுவையண்டை வந்துசேர், நேசர் ஐங்காயம் நோக்கிப்பார்; ஒப்பற்ற அன்பைச் சிந்தியேன்; இயேசு சிலுவையில் மாண்டார். 6. உருகும் நெஞ்சும் கண்ணீரும் உள்ளன்பும் தாரும், இயேசுவே; மாந்தர்மீதன்பு கூர்ந்ததால் நீர் சிலுவையில் மாண்டீரே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thukkam Kontaada Vaarumae, Paarum! Nam Meetpar Maritthaar Thikil Kalakkam Kolluvom Yesu Siluvaiyil Maantaar. 2. Por Veerar, Yoodhar Ninthitthum, Maa Porumaiyaaych Sakitthaar Naamo Pulampi Azhuvom; Yesu Siluvaiyil Maantaar. 3. Kai Kaalai Aani Peerirrae, Thavanatthaal Naa Varantaar; Kan Ratthatthaalae Mangkirrae; Yesu Siluvaiyil Maantaar. 4. Mummani Naeram Maandharkkaay, Tham Melanatthaalae Kenjsinaar; Nal Vaakkiyam Aezhum Mozhinthae Yesu Siluvaiyil Maantaar. 5. Siluvaiyantai Vanthusaer, Naesar Aingkaayam Nokkippaar; Oppartra Anpaich Sinthiyaen; Yesu Siluvaiyil Maantaar. 6. Urukum Nenjsum Kanneerum Ullanpum Thaarum, Yesuvae; Maandharmeedhanpu Koorndhathaal Neer Siluvaiyil Maanteerae!