பாடல் #2564
தீயன் ஆயினேன்
🔤 Theeyan Aayinaen
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தீயன் ஆயினேன், ஐயா, எளியேன் உற்ற தீவினை அனைத்தும் தீரும்; தேவரீர் மேலே என் பாரம், தீயன் ஆயினேன், ஐயா மாயவலை வீசுவலு பேயின் வினை தீர, நேயமுடனே உறுசகாயனாய் எமக்கென்றிங்கு நிச்சயித்தெழுந்த எங்கள் அச்சயா, திருக்குமாரா - தீய 1.நன்மை செய்யவே நான் நினைத்தாலும், என் தன்மை வேறதாய்ப் பின்னம் ஆகுமே; என்ன என்தன் நீதி கந்தை அன்ன அருவருப்பாமே; எத்தனை ஆனாலும் உன்தன் சித்தம் வைத்தனுக்கிரகிப்பாய் - தீய 2.பாவமீறி என் ஆவி தள்ளாடி நற் சீவ பாதையைத் தாவி ஓடியே, ஆவலாய் அழி வுறும் துர்ச் சாவின் வழியே தொடர்ந்து அக்கிரமச் செய்கைகளில் சிக்கினேன்; ஐயா, உன் தஞ்சம்! - தீய 3.தீது செய்பவன் தேவன் முன்னே உத்ர வாதியாய் உறு நீதம் உண்டென, போதம் உற வேத நெறி ஓதிய ஏசு நாதா, உன் புண்ணியத்தால் என்னை உய்யப் பண்ணிடக் கிருபை செய்வாய் - தீய
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Theeyan Aayinaen, Aiyaa, Eliyaen Urtra Theevinai Anaitthum Theerum; Thaevareer Maelae En Paaram, Theeyan Aayinaen, Aiyaa Maayavalai Veesuvalu Paeyin Vinai Theera, Naeyamudanae Urusakaayanaay Emakkenringku Nicchayitthezhundha Enggal Acchayaa, Thirukkumaaraa - Theeya 1.nanmai Seyyavae Naan Ninaitthaalum, En Thanmai Vaerathaayp Pinnam Aakumae; Enna Enthan Neethi Kanthai Anna Aruvaruppaamae; Etthanai Aanaalum Unthan Sittham Vaitthanukkirakippaay - Theeya 2.paavameeri En Aavi Thallaati Nar Seeva Paathaiyaith Thaavi Otiyae, Aavalaay Azhi Vurum Thurch Saavin Vazhiyae Thodarnthu Akkiramach Seykaigalil Sikkinaen; Aiyaa, Un Thanjjam! - Theeya 3.theethu Seypavan Devan Munnae Uthra Vaathiyaay Uru Needham Untena, Podham Ura Vaedha Neri Othiya Aesu Naathaa, Un Punniyatthaal Ennai Uyyap Pannidak Kirupai Seyvaay - Theeya