பாடல் #2561
தீய பாவத்தினைவிட
🔤 Theeya Paavatthinaivida
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தீய பாவத்தினைவிட் டோடாயோ? தினமும், யேசு அன்பை நாடாயோ? 1.மா கிருபையாக, ஏகன் அன்பாக வந்ததிலையோ, பூவில் உனக்காக? - தீய 2.நாற்பது நாளாய்த் தீப்பசிக் காளாய் நாதன் உன் பொருட்டிருந்தார், கேளாய்? - தீய 3.யூதர்கள் வைய, வேதனை செய்ய, உன் பவம் செய்த தவர் உளம் நைய. - தீய 4.சிலுவையில் இறுக்க உலகரும் நொறுக்கச் செய்த துன் பவம் மேசியா இறக்க. - தீய 5.அலகை உன் மீது பல வகைத் தீது ஆவலுடன் செய்வதால் புவி மீது. - தீய 6.ஐயோ! என் மனமே, வையகம் வனமே; அழியா உலகில் அன்புற் றனுதினமே. - தீய
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Theeya Paavatthinaivit Totaayo? Thinamum, Yaesu Anpai Naataayo? 1.maa Kirupaiyaaga, Aegan Anpaaga Vandhathilaiyo, Poovil Unakkaaga? - Theeya 2.naarpathu Naalaayth Theeppasik Kaalaay Naadhan Un Poruttirunthaar, Kaelaay? - Theeya 3.yoodharkal Vaiya, Vaedhanai Seyya, Un Pavam Seytha Thavar Ulam Naiya. - Theeya 4.siluvaiyil Irukka Ulakarum Norukkach Seytha Thun Pavam Maesiyaa Irakka. - Theeya 5.alakai Un Meethu Pala Vakaith Theethu Aavaludan Seyvathaal Puvi Meethu. - Theeya 6.aiyo! En Manamae, Vaiyakam Vanamae; Azhiyaa Ulakil Anpur Ranuthinamae. - Theeya