பாடல் #2557
திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா
🔤 Thivya Anpin Satthatthai Iratsakaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா கேட்டு உம்மை அண்டினேன் இன்னும் கிட்டிச் சேர என் ஆண்டவா ஆவல் கொண்டிதோ வந்தேன் இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன் பாடுபட்ட நாயகா இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன் ஜீவன் தந்த இரட்சகா என்னை முற்றுமே இந்த நேரத்தில் சொந்தமாக்கிக் கொள்ளுமேன் உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில் நாடித் தேடச் செய்யுமேன் திருப்பாதத்தில் தங்கும் போதெல்லாம் பேரானந்தம் காண்கிறேன் உம்மை நோக்கி வேண்டுதல் செய்கையில் மெய் சந்தோஷமாகிறேன் இன்னும் கண்டிராத பேரின்பத்தை விண்ணில் பெற்று வாழுவேன் திவ்ய அன்பின் ஆழமும் நீளமும் அங்கே கண்டானந்திப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thivya Anpin Satthatthai Iratsakaa Kaettu Ummai Antinaen Innum Kittich Saera En Aandavaa Aaval Kontitho Vanthaen Innum Kitta Kitta Saertthuk Kollumaen Paatubatta Naayakaa Innum Kitta Kitta Saertthuk Kollumaen Jeevan Thandha Iratsakaa Ennai Murrumae Indha Naeratthil Sondhamaakkik Kollumaen Ummai Vaanjsaiyotendhan Ullatthil Naatith Thaedach Seyyumaen Thiruppaadhatthil Thangkum Pothellaam Paeraanandham Kaankiraen Ummai Nokki Vaentudhal Seykaiyil Mey Santhoshamaakiraen Innum Kantiraadha Paerinbatthai Vinnil Perru Vaazhuvaen Thivya Anpin Aazhamum Neelamum Angkae Kantaananthippaen