பாடல் #2555
திறப்பின் வாசலில் நிற்கும் மனிதனை
🔤 Thirappin Vaasalil Nirkum Manidhanai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திறப்பின் வாசலில் நிற்கும் மனிதனை தேடினேன் எங்கும் காணவில்லை தனக்காய் வாழ துடிக்கும் மனிதர்கள் தரணியில் எங்கும் குறைய வில்லை 1. தாழ்மை தேவனின் தாகமறிய முனையும் தேவ மனிதர் எங்கே இருளில் வாழும் இந்திய மனிதரை விரைந்து மீட்கும் இளைஞர் எங்கே 2. மண்ணில் வாழும் கொஞ்ச நாட்களை மதித்து வாழ முனைபவர் யார் மகிமை இழந்து மாளும் மனிதரை கிறிஸ்து சமூகம் இணைப்பவர் யார் 3. குற்ற உணர்வு முற்றும் நீங்கிய குயவன் கரத்தின் களிமண் யார் கனமாய் உழைக்கும் பாத்திரமாக வனைய கொடுப்பவர் நம்மிலே யார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thirappin Vaasalil Nirkum Manidhanai Thaetinaen Engkum Kaanavillai Thanakkaay Vaazha Thutikkum Manidharkal Tharaniyil Engkum Kuraiya Villai 1. Thaazhmai Devanin Thaagamariya Munaiyum Thaeva Manidhar Engkae Irulil Vaazhum Inthiya Manidharai Virainthu Meetkum Ilainjar Engkae 2. Mannil Vaazhum Konjja Naatkalai Mathitthu Vaazha Munaibavar Yaar Makimai Izhanthu Maalum Manidharai Kiristhu Samoogam Inaippavar Yaar 3. Kurtra Unarvu Murrum Neengkiya Kuyavan Karatthin Kaliman Yaar Kanamaay Uzhaikkum Paatthiramaaga Vanaiya Kotuppavar Nammilae Yaar