பாடல் #2550
திருமுகத் தொளிவற்று
🔤 Thirumugath Tholivarru
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.திருமுகத் தொளிவற்று, பெருவினைகளில் உற்றுச் சீர்கெட்ட பாவி ஆனேன்; - நான் ஒரு முகமாய் உனதிடம் மனந்திரும்பிட, ஊக்கம் அருள், பரனே. 2.துரிச்சையினால் என் அசுத்தம் நிறைந்து நல் சோபிதம் தான் இழந்தேன்; - பேய்ப் பரீட்சையினாலும் மயக்கம் அடையும் இப்பாவிக் கிரங் கையனே. 3.பாதகர் மீதில் பரிதபியாமலும், பாவம் பொறாமலும் நீ - சுத்த நீதியை நோக்கில், உனது சமூகத்தில் நிற்பவர் ஆர், துய்யனே? 4.தன் புண்ணி யத்தால் எவனும் மன்னிப்புறத் தக்கவன் இல்லை மெய்யாய்; - எந்தை! உன் தயையால் உன் திருச்சுதன் மூலமாய் உண்டு பொறுப் பெனக்கே. 5.மண்ணையே நோக்கி உழன்று தவிக்கும் என் வஞ்சக நெஞ்சதனை - நேராய் விண்ணையே நோக்கிடப் பண், இறைவா; உனை வேண்டி மன்றாடுகின்றேன். 6.மாறுபாடான இவ் வேழைக்கிரங்கி நீ மன்னிப்பருள் வதன்றி, - எனக் காறுதலாக உனது நல் ஆவியை அனுக்கிரகித் தாள், பரனே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.thirumugath Tholivarru, Peruvinaigalil Urruch Seerketta Paavi Aanaen; - Naan Oru Mugamaay Unathidam Mananthirumpida, Ookkam Arul, Paranae. 2.thurichsaiyinaal En Asuttham Nirainthu Nal Sopidham Thaan Izhanthaen; - Paeyp Pareetsaiyinaalum Mayakkam Ataiyum Ippaavik Kirang Kaiyanae. 3.paadhakar Meethil Paridhapiyaamalum, Paavam Poraamalum Nee - Suttha Neethiyai Nokkil, Unathu Samoogatthil Nirpavar Aar, Thuyyanae? 4.than Punni Yatthaal Evanum Mannippurath Thakkavan Illai Meyyaay; - Enthai! Un Thayaiyaal Un Thiruchsudhan Moolamaay Untu Porup Penakkae. 5.mannaiyae Nokki Uzhanru Thavikkum En Vanjjaka Nenjjathanai - Naeraay Vinnaiyae Nokkidap Pan, Iraivaa; Unai Vaenti Manraatukinraen. 6.maarupaataana Iv Vaezhaikkirangki Nee Mannipparul Vathanri, - Enak Kaarudhalaaga Unathu Nal Aaviyai Anukkirakith Thaal, Paranae.