பாடல் #2549
திருமா மறையே
🔤 Thirumaa Maraiyae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திருமா மறையே - அருள்பதியே! நின் திருச்சபை வளர நின்தயை புரியே. 1.கருணை வாசகக் கதிர்பலத் தொளிர, கனகார் புவிநின்றே அகல, மருள்ஜன மொளியுற அவனருளுணர. - திரு 2.யேசு நாமமெங் கணுமொளி வீச, இறையே நினை மெய் விசுவாச நேச மோடேயுனின் தாசர்கள்பேச. - திரு 3.ஞாலம் அந்தமட் டெம்முடனிருக்க, நயவாக் களித்தாய் எமக்குருக்கச், சீலமதாயுனின் வசனமதுரைக்க. - திரு 4.ஆறிரண்டு பேரான வருடனே அமலா இருந்தாய் வெகுதிடனே, போரற அருளிய நேயமேபோலே. - திரு 5.நின்னையன்றிக் கட்டிட எமக்காகா, நேயா, தூயா நினை வாகா, உன்னி உழைத்திடப் பலமளியேகா. - திரு 6.சத்ய போதம் இத்தரைதனில் செழிக்க, தமியோர் நின் புகழே உரைக்க, நித்திய பாக்கியமே புவிக்களிக்க. - திரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thirumaa Maraiyae - Arulpathiyae! Nin Thirucchapai Valara Ninthayai Puriyae. 1.karunai Vaasakak Kathirpalath Tholira, Kanakaar Puvininrae Agala, Maruljana Moliyura Avanarulunara. - Thiru 2.yaesu Naamameng Kanumoli Veesa, Iraiyae Ninai Mey Visuvaasa Naesa Motaeyunin Thaasarkalpaesa. - Thiru 3.njaalam Andhamat Temmudanirukka, Nayavaak Kalitthaay Emakkurukkach, Seelamathaayunin Vasanamathuraikka. - Thiru 4.aarirantu Paeraana Varudanae Amalaa Irunthaay Vekuthidanae, Porara Aruliya Naeyamaepolae. - Thiru 5.ninnaiyanrik Kattida Emakkaakaa, Naeyaa, Thooyaa Ninai Vaakaa, Unni Uzhaitthidap Palamaliyaekaa. - Thiru 6.sathya Podham Ittharaidhanil Sezhikka, Thamiyor Nin Pugazhae Uraikka, Nitthiya Paakkiyamae Puvikkalikka. - Thiru