பாடல் #2537
தினமே நானுனைத்
🔤 Thinamae Naanunaith
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தினமே நானுனைத் தேடிப்பணியச் செயும்துணையே நித்ய ஏக தெய்வமே. மனநிலை தவறி மருகினேன் நானே, மாசிலானே அனுகூலநற்! கோனே. - தின 1.அருள் நாயகனெ, அம்பரத் தீசா, ஆதியாய் நின்றபேர் அருள்நிறை பாசா, மருள்பவ நாசா, மனுக்குல ராசா, மகிமை யடைந்தமா மகத்துவ நேசா! - தின் 2.செத்தேன், எனக்குன் ஜீவன் அளித்தாய், தீயனென் மேல் திருத் தீர்த்தம் தெளித்தாய், முத்தேயென் நன்மைக் காக மரித்தாய், மோதிய தீவினை யாவும் அழித்தாய். - தின 3.திரளென் பாவங்கள் தீர்த்திட வாராய், தீமை மறந்துநான் சீர்பெறக்கூராய், கரள் குணமாற்றிக் கனிந்தெனைச் சேராய், களிப்புடன் பாடிடக் கருணைக்கண் பாராய். - தின
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thinamae Naanunaith Thaetippaniyach Seyumthunaiyae Nithya Aega Theyvamae. Mananilai Thavari Marukinaen Naanae, Maasilaanae Anukoolanar! Konae. - Thina 1.arul Naayakane, Ambarath Theesaa, Aathiyaay Nindrapaer Arulnirai Paasaa, Marulpava Naasaa, Manukkula Raasaa, Makimai Yataindhamaa Makatthuva Naesaa! - Thin 2.setthaen, Enakkun Jeevan Alitthaay, Theeyanen Mael Thiruth Theerttham Thelitthaay, Mutthaeyen Nanmaik Kaaga Maritthaay, Mothiya Theevinai Yaavum Azhitthaay. - Thina 3.thiralen Paavanggal Theertthida Vaaraay, Theemai Maranthunaan Seerperakkooraay, Karal Kunamaarrik Kaninthenaich Saeraay, Kalippudan Paatidak Karunaikkan Paaraay. - Thina